search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராகுல் காந்தி
    X
    ராகுல் காந்தி

    டெல்லி கலவரம் கவலை அளிக்கிறது- ராகுல்காந்தி டுவிட்டர் பதிவு

    டெல்லியில் திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்தை எதிர்த்து நடந்த போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில் போலீஸ்காரர் உள்பட 7 பேர் பலியானது குறித்து ராகுல் காந்தி கவலை தெரிவித்துள்ளார்.
    புதுடெல்லி:

    டெல்லியில் குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பாளர்கள் மற்றும் ஆதரவாளர்களுக்கு இடையே நடந்த மோதல் கலவரமாக வெடித்தது.

    இதில் போலீஸ்காரர் உள்பட 7 பேர் பலியாகி உள்ளனர். இந்த கலவரம் கவலை அளிப்பதாக காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி கூறி உள்ளார். இது தொடர்பாக அவர் டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-

    டெல்லி கலவரம் மிகவும் கவலை அளிக்கிறது. ஆரோக்கியமான ஜனநாயகத்திற்கு அமைதி வழி போராட்டம்தான் தீர்வே தவிர வன்முறையால் எந்த தீர்வும் கிடைக்காது.

    வன்முறையை கைவிட்டு கலவரக்காரர்களிடம் இருந்து டெல்லிவாசிகள் விலகி இருக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

    சோனியா காந்தி

    காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    டெல்லியில் நடந்த வன்முறை கண்டனத்திற்குரியது. காந்தியடிகள் மண்ணில் வன்முறைக்கு இடம் இல்லை. டெல்லியில் மீண்டும் அமைதி திரும்ப வேண்டும்.

    இவ்வாறு சோனியா காந்தி கூறினார்.

    முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-

    டெல்லி வன்முறையில் ஏற்பட்ட உயிரிழப்பும், சேதங்களும் அதிர்ச்சி அளிக்கிறது. குடியுரிமை திருத்த சட்டம் பிரிவினைக்கு வழி வகுக்கும் என்று பலமுறை எச்சரித்தும் மத்திய அரசு செவி சாய்க்கவில்லை.

    குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக போராடுபவர்களின் கோரிக்கையை மத்திய அரசு கேட்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
    Next Story
    ×