search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டொனால்டு டிரம்ப்
    X
    டொனால்டு டிரம்ப்

    சபர்மதி ஆசிரமத்தில் காந்தி குறித்து எழுதாத டொனால்டு டிரம்ப்

    சபர்மதி ஆசிரமத்திற்குச் சென்ற அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் காந்தி குறித்து வருகை பதிவேட்டில் ஏதும் எழுதாதது விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.
    அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், இரண்டு நாள் சுற்றுப் பயணமாக இந்தியா வந்துள்ளார். அவருடன் மனைவி மெலனியா டிரம்ப், மகள் இவான்கா டிரம்ப், மருமகன் ஜாரெட் குஷ்னர் மற்றும் உயர்மட்டக் குழுவினரும் வந்துள்ளனர்.  

    டொனால்டு டிரம்ப் தனது மனைவியுடன் சபர்மதி ஆசிரமத்திற்கு சென்றார். வழக்கமாக சபர்மதி ஆசிரம் செல்லும் வெளிநாட்டு தலைவர்கள் அங்குள்ள வருகை பதிவேட்டில் கையெழுத்திட்டு காந்திஜி-யை பற்றி சில வரிகள் குறிப்பிடுவார்கள்.

    ஆனால் டொனால்டு டிரம்ப் அந்த வருகை பதிவேட்டில் ‘‘இந்த அற்புதமான பயணத்திற்கு ஏற்பாடுகளை செய்த இனிய நண்பர் மோடிக்கு நன்றி’’ எனக் குறிப்பிட்டுள்ளார். காந்தி குறித்து ஏதும் குறிப்பிடவில்லை.

    காந்திஜியை பற்றி குறிப்பிடாதது குறித்து டுவிட்டர்வாசிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். முன்னாள் அதிபர் ஒபாமா இந்தியா வந்தபோது காந்தி குறித்து புகழ்ந்து எழுதியிருந்தார். இதை வைத்து விமர்சனம் செய்து வருகின்றனர்.
    Next Story
    ×