search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மன்மோகன் சிங்
    X
    மன்மோகன் சிங்

    ‘பாரத் மாதா கி ஜெய்’ கோ‌ஷம் தவறாக பயன்படுத்தப்படுகிறது- மன்மோகன் சிங் குற்றச்சாட்டு

    தீவிரவாத சிந்தனையை வளர்க்க ‘பாரத் மாதா கி ஜெய்’ கோ‌ஷம் தவறாக பயன்படுத்தப்படுகிறது என்று முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் குற்றம் சாட்டியுள்ளார்.

    புதுடெல்லி:

    நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பேச்சுகள், எழுத்துக்கள் அடங்கிய புத்தம் வெளியீட்டு விழா டெல்லியில் நடைபெற்றது. இதில் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் கலந்து கொண்டு அவர் பேசியதாவது:-

    இந்தியாவை எழுச்சி மிகு ஜனநாயகமாகவும், வல்லரசு சக்தியாகவும் உலக நாடுகள் அங்கீகரித்திருக்கிறது. என்றால் அதற்கான பெருமைகள் அனைத்தும் நமது முதல் பிரதமர் ஜவஹர் லால் நேருவையை சாரும்.

    இந்த புத்தகத்தில் நேருவின் உன்னதமான பேச்சுகள், அவரது உரைகள் கட்டுரைகள் கடிதங்கள் மிகவும் வெளியிப்படையான சில நேர்காணல்களில் இருந்து குறிப்புகள் உள்ளன.

    மிகக் கடினமான நாட்களில் நாட்டை அவர் வழிநடத்திச்சென்றார். அந்த காலக்கட்டத்தில் மிகச்சில நாடுகளால் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்பட்ட ஜனநாயக வழியை அவர் தேர்வு செய்தார். தேர்வு செய்ததுடன் மட்டுமின்றி அதனை வெற்றிகரமாக செயல்படுத்தியும் காட்டினார்.

    நேரு இல்லாவிட்டால் இன்று உள்ள நிலையை இந்தியா எட்டியிருக்க முடியாது. ஆனால் வரலாற்றை படிக்க பொறுமை இல்லாதவர்களும், பாரபட்சமான கருத்தைக் கொண்டிருப்பவர்களும் இன்று நேருவை தவறாக சித்தரிக்க முயற்சிக்கிறார்கள்.

    அவர்களின் தவறான கருத்தியவை புறம்தள்ளும் வலிமை வரலாற்றுக்கு உண்டு என நம்புகிறேன்.

    இந்தியாவில் பல மில்லியன் மக்களை தவிர்த்து விட்டு, தீவிரவாத சிந்தனையை வளர்க்க தேசியவாதமும், பாரத் மாதா கி ஜெய் கோ‌ஷமும் தவறாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் பேசினார். 

    Next Story
    ×