search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உத்தவ் தாக்கரே
    X
    உத்தவ் தாக்கரே

    மார்ச் 7ம் தேதி அயோத்தி செல்கிறார் உத்தவ் தாக்கரே

    மகாராஷ்டிரா முதல் மந்திரி உத்தவ் தாக்கரே மார்ச் 7-ம் தேதி அயோத்தி சென்று ஸ்ரீ ராமரை வழிபடுகிறார் என அக்கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.
    மும்பை:

    மகாராஷ்டிராவில் நடந்த சட்டசபை தேர்தலில் பா.ஜ.க., சிவசேனா கூட்டணி அமோக வெற்றி பெற்றது. ஆட்சி அமைப்பதில் இழுபறி நீடித்ததால் கூட்டணி முறிந்தது.

    இதைத்தொடர்ந்து, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகளுடன் கைகோர்த்த சிவசேனா புதிய கூட்டணியை உருவாக்கி மகாராஷ்டிராவில் ஆட்சி அமைத்தது. சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே முதல் மந்திரியாக பதவி ஏற்றார்.

    முதல் மந்திரியாக பதவியேற்ற உத்தவ் தாக்கரே நேற்று தலைநகர் டெல்லி சென்றார். அங்கு பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா, காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி உள்ளிட்ட தலைவர்கள் சந்தித்துப் பேசினார்.

    இந்நிலையில், மகாராஷ்டிரா முதல் மந்திரி உத்தவ் தாக்கரே மார்ச் 7-ம் தேதி அயோத்தி சென்று ஸ்ரீ ராமரை வழிபடுகிறார் என அக்கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக சஞ்சய் ராவத் வெளியிட்டுள்ள டுவிட்டரில், மகாராஷ்டிராவில் ஆட்சி பொறுப்பேற்று 100-வது நாளில் முதல் மந்திரி உத்தவ் தாக்கரே மார்ச் மாதம் 7ம் தேதி அயோத்தி செல்கிறார். அங்கு செல்லும் அவர், ஸ்ரீராமரை வணங்கி, தீபாராதனை நடத்த உள்ளார். அந்த நிகழ்ச்சியில் ஏராளமான கட்சி தொண்டர்கள் கலந்து கொள்வார்கள் என பதிவிட்டுள்ளார்.
    Next Story
    ×