search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ் தாக்குதலில் தப்பிக்க முகமூடி அணிந்துள்ள மக்கள்
    X
    கொரோனா வைரஸ் தாக்குதலில் தப்பிக்க முகமூடி அணிந்துள்ள மக்கள்

    கொரோனா பாதிப்பு எதிரொலி: சிங்கப்பூருக்கு தேவையற்ற பயணங்களை தவிர்க்க வேண்டும் - மத்திய அரசு

    கொரோனா வைரஸ் தாக்குதல் எதிரொலியாக, சிங்கப்பூருக்கு அவசியமற்ற பயணங்களை தவிர்க்க வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
    புதுடெல்லி:

    சீனாவின் ஹுபெய் மாகாண தலைநகரான உகானில் இருந்து நாடு முழுவதும் பரவிய கொரோனா வைரஸ், தற்போது சீனாவை மட்டுமின்றி உலகம் முழுவதையும் கடுமையாக மிரட்டி வருகிறது. 

    இந்த வைரசால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும், பலியானோர் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் சீன மருத்துவத் துறையும், அரசும் செய்வதறியாது திகைத்து வருகின்றன. 

    சீனாவில் தற்போது வரை கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 2,345 ஆக அதிகரித்துள்ளது. வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 76,288 ஆக உயர்ந்துள்ளது. 

    இந்நிலையில், கொரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலியால் சிங்கப்பூருக்கு அவசியமற்ற பயணங்களை தவிர்க்க வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

    இதுதொடர்பாக மத்திய அமைச்சரவை செயலாளர் ராஜீவ் கௌபா கூறுகையில், கொரோனா வைரஸ் எதிரொலியால் இந்தியர்கள் சிங்கப்பூர் செல்வதை தவிர்க்க வேண்டும். நேபாளம், இந்தோனேசியா, மலேசியா, வியட்நாமில் இருந்து இந்தியா வரும் பயணிகளுக்கு சோதனை நடத்தப்படும். காய்ச்சல்,இருமல்அறிகுறி இருந்தால் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×