search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மத்தியஸ்தர்கள் சஞ்சய் ஹெக்டே, சாதனா ராமச்சந்திரன்
    X
    மத்தியஸ்தர்கள் சஞ்சய் ஹெக்டே, சாதனா ராமச்சந்திரன்

    ஷாகீன் பாக் போராட்டக்காரர்களுடன் மத்தியஸ்தர்கள் இரண்டாவது நாளாக பேச்சுவார்த்தை

    டெல்லி ஷாகீன் பாக் போராட்டக்காரர்களுடன் உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட மத்தியஸ்தர்கள் இரண்டாவது நாளாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுவருகின்றனர்.
    புதுடெல்லி:

    குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக டெல்லி ஷாகீன் பாக் பகுதியில் ஏராளமான முஸ்லிம் பெண்கள் திரண்டு இரண்டு மாதங்களுக்கும் மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர். போக்குவரத்துக்கு இடையூறாக சாலையை மறித்து தொடா் போராட்டத்தில் ஈடுபட்டுவருவோரை அப்புறப்படுத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. 

    இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், பொது மக்களுக்கு இடையூறை ஏற்படுத்தாமல் மாற்று இடத்துக்கு போராட்டக்காரா்கள் செல்லலாம் என்று அறிவுறுத்தினர். 

    இதுதொடா்பாக பேச்சுவார்த்தை நடத்த மூத்த வழக்குரைஞா் சஞ்சய் ஹெக்டேவை நியமித்தனர். அவர், வழக்குரைஞா் சாதனா ராமச்சந்திரன், முன்னாள் தலைமை தகவல் ஆணையா் வஜாஹத் ஹபிபுல்லா ஆகியோரின் உதவியை பெறலாம் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

    இதற்கிடையில், மத்தியஸ்தம் செய்ய உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட வழக்கறிஞர்கள் சஞ்சய் ஹெக்டே, சாதனா ராமச்சந்திரன் ஆகியோர் நேற்று ஷாகீன் பாக் சென்று, போராட்டம் நடத்தும் பெண்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். போராட்டத்தை வேறு இடத்திற்கு மாற்றும்படி கேட்டுக்கொண்டனர். நேற்றைய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாமல் நிறைவடைந்தது.

    சஞ்சய் ஹெக்டே, சாதனா ராமச்சந்திரன்

    இந்நிலையில், ஷாகீன் பாக்கில் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் முஸ்லிம் பெண்களுடன் இரண்டாவது நாளாக உச்சநீதிமன்றதால் நியமிக்கப்பட்ட இரண்டு வழக்கறிஞர்களும் இன்று மீண்டும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுவருகின்றனர். 

    இந்த பேச்சுவார்தையில் சுமூக முடிவுகள் எட்டப்பட்டு ஷாகீன்பாக் பகுதியில் உள்ள சாலையில் இருந்து வேறு இடத்திற்கு போராட்டக்களம் மாற்றப்படு போக்குவரத்து இடையூறுகள் இன்றி செயல்பாட்டுக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
    Next Story
    ×