search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மீன்
    X
    மீன்

    கொரோனா வைரஸ் எதிரொலி- இந்தியாவில் மீன், இறைச்சி விற்பனைக்கு புதிய கட்டுப்பாடு

    கொரோனா வைரஸ் போன்ற நோய்கள் இந்தியாவிலும் பரவி விடாமல் தடுக்க மீன், இறைச்சி போன்ற உணவு விற்பனைக்கு புதிய கட்டுப்பாடுகளை கொண்டுவர மத்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணையம் முடிவு செய்துள்ளது.
    புதுடெல்லி:

    சீனாவில் கொரோனா வைரஸ் நோய் தாக்கி இதுவரை 1700-க்கும் மேற்பட்டோர் பலியாகி இருக்கிறார்கள். இந்த நோய் உலகம் முழுவதும் பரவி பெரும் ஆபத்தை ஏற்படுத்திவிடலாம் என்ற அச்சநிலை நிலவுகிறது.

    இந்த நோய் சீனாவில் வுகான் பகுதியில் தான் முதலில் பரவியது. அங்குள்ள அசைவ உணவு மார்க்கெட்டில் இருந்து தான் விலங்குகளின் இறைச்சி மூலமாக பரவியதாக கூறப்படுகிறது.

    கொரோனா வைரஸ்

    எனவே இதுபோன்ற நோய்கள் இந்தியாவிலும் பரவி விடாமல் தடுக்க மீன், இறைச்சி போன்ற உணவுகளை எவ்வாறு பாதுகாத்து விற்பனை செய்ய வேண்டும் என்பது குறித்து புதிய கட்டுப்பாடுகளை கொண்டுவர மத்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணையம் முடிவு செய்துள்ளது.

    இது சம்பந்தமாக ஆலோசனைகள் நடத்தி வருவதாக அதன் அதிகாரிகள் கூறினார்கள்.

    இறைச்சிக்காக விலங்குகள் வெட்டப்படும் இடங்கள் எப்படி இருக்க வேண்டும், அவற்றை மார்க்கெட்டில் வைத்து எப்படி விற்பனை செய்ய வேண்டும். அதே போல மீன்களை எப்படி பராமரித்து வைத்து விற்பது என்பது குறித்து புதிய விதிமுறை வகுக்க உள்ளதாக அதிகாரிகள் கூறினார்கள்.

    இந்தியாவில் அரசு இறைச்சி கூடம் மட்டுமல்லாமல் 5500 தனியார் இறைச்சி கூடங்களும் செயல்பட்டு வருகின்றன. அவை முழுவதையும் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு செய்து வருவதாக உணவு பாதுகாப்பு தர நிர்ணய தலைமை நிர்வாகி பவன் அகர்வால் கூறினார்.

    மீன் மற்றும் இறைச்சி மார்க்கெட்டுகள் தொடர்பாக தற்போது உள்ள சட்டத்திட்ட விதிகளில் மேலும் மேம்படுத்தி புதிய நடைமுறைகள் உருவாக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

    மேலும் இவற்றை ஒழுங்குபடுத்துவதற்காக மேலும் 6 புதிய கிளைகளை உருவாக்கப்போவதாகவும், மேலும் உணவுகளை ஆய்வு செய்வதற்காக புதியதாக 2 ஆய்வுக்கூடங்கள் உருவாக்க இருப்பதாகவும் அதிகாரிகள் கூறினார்.

    இத்துடன் வெளிநாடுகளில் இருந்து வரும் உணவுகளை ஆய்வு செய்வதற்கு புதிதாக 4 ஆய்வுக்கூடங்கள் உருவாக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×