search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வைரல் வீடியோ ஸ்கிரீன்ஷாட்
    X
    வைரல் வீடியோ ஸ்கிரீன்ஷாட்

    பழைய வீடியோவை மீண்டும் வைரலாக்கும் நெட்டிசன்கள்

    சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோ ஒன்றில் பா.ஜ.க. கட்சியின் எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ. இருவரும் கடுமையாக தாக்கிக்கொள்ளும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.



    பா.ஜ.க. எம்.பி. மற்றும் பா.ஜ.க. எம்.எல்.ஏ.-வை கடுமையாக தாக்கிக்கொள்ளும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. ஃபேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப் தளங்களில் அதிகம் பகிரப்படும் வைரல் வீடியோ மார்ச் 2019-ம் ஆண்டு எடுக்கப்பட்டது என தெரியவந்துள்ளது.

    வைரல் வீடியோ "காலணி கொண்டு பா.ஜ.க.வுடன் மோதிக்கொள்ளும் பா.ஜ.க..... கல்வியறிவற்றவர்கள் மீட்டிங்கில் விவாதிக்க தெரியாமல், ஆட்சி செய்ய விரும்புகின்றனர்" எனும் தலைப்பில் பகிரப்படுகிறது. வீடியோ பற்றிய தேடல்களில், இதே வீடியோ 2019 ஆண்டு மார்ச் மாதம் வைரலாகி இருப்பது தெரியவந்துள்ளது.

    வைரல் பதிவு ஸ்கிரீன்ஷாட்

    இதுபற்றிய செய்தி தொகுப்பில் பா.ஜ.க. மாவட்ட தலைமையகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பா.ஜ.க. எம்.பி. மற்றும் பா.ஜ.க. எம்.எல்.ஏ. ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் தற்சமயம் வைரலாகும் வீடியோ பழையது என தெளிவாகிவிட்டது.

    போலி செய்திகளை பரப்பாதீர்கள். வலைதளங்களில் வரும் தகவல்களின் உண்மைத்தன்மை தெரியாமல் அவற்றை பரப்ப வேண்டாம். சமயங்களில் போலி செய்திகளால் உயிரிழப்பு உள்பட பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன.

    Next Story
    ×