search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ் பரிசோதனை முகாம்
    X
    கொரோனா வைரஸ் பரிசோதனை முகாம்

    சீனாவில் இருந்து டெல்லி வந்த 406 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை

    சீனாவில் இருந்து டெல்லி வந்த 406 பேருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டு உள்ளது.
    புதுடெல்லி:

    சீனாவில் கடந்த டிசம்பர் மாத இறுதியில் ஹுபெய் மாகாண தலைநகர் உகானில் கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது.  இதன்பின்னர் பெய்ஜிங் மற்றும் ஷாங்காய் என நாடு முழுவதும் பரவியது.  எனினும், உகானில் இந்த வைரஸ் அதிக பாதிப்பு ஏற்படுத்தியது.  இதனால் தொடர்ந்து உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றன.

    கொரோனா வைரஸ் பாதிப்பினால் இதுவரை உகானில் அமெரிக்க பெண் மற்றும் ஜப்பானிய ஆண் என வெளிநாடுகளை சேர்ந்த 2 பேர் பலியாகி உள்ளனர்.  இதேபோன்று, பிலிப்பைன்ஸ் தீவில் சீனர் ஒருவர் மற்றும் ஹாங்காங் நாட்டில் ஒருவர் என சீனாவை தவிர்த்து வெளிநாடுகளில் இருவர் பலியாகினர்.

    இதனிடையே, இந்த வைரஸ் பாதிப்பிற்கு ஒரே நாளில் 142 பேர் மரணம் அடைந்த நிலையில் பலி எண்ணிக்கை 1,665 ஆக உயர்வடைந்து உள்ளது.  சீனா முழுவதும் 68 ஆயிரத்து 500 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.

    சீனாவின் உகான் நகரில் இருந்து டெல்லி வந்த 406 பேர் சாவ்லா பகுதியில் உள்ள இந்தோ-திபெத் எல்லை போலீசாரின் பரிசோதனை மையத்தில் வைத்து தீவிரமுடன் கண்காணிக்கப்பட்டு வந்தனர்.

    இதில் 406 பேருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை என மருத்துவ பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது.  இதனை அடுத்து பரிசோதனை மையத்தில் இருந்து அவர்களை விடுவிப்பது பலகட்ட முறையில் நடைபெறும்.  மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் ஆலோசனையின்பேரில் உரிய மருத்துவ நடைமுறைகளின்படி 406 பேரும் நாளை விடுவிக்கப்பட உள்ளனர்.
    Next Story
    ×