search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிவசேனா
    X
    சிவசேனா

    கெஜ்ரிவாலை எப்படி எதிர்கொள்வது என்பதில் பாஜகவுக்கு குழப்பம்: சிவசேனா

    டெல்லி சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி வெற்றி பெற்று உள்ள நிலையில், அக்கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலை எதிர்கொள்ள வழிதெரியாமல் பாரதீய ஜனதா குழம்பி உள்ளதாக சிவசேனா தெரிவித்து உள்ளது.
    மும்பை :

    டெல்லி சட்டசபை தேர்தலில் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி அமோக வெற்றி பெற்றது. இது தொடர்பாக சிவசேனாவின் அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னாவின் தலையங்கத்தில் கூறியிருப்பதாவது:-

    டெல்லி சட்டசபை தேர்தல் பிரசாரத்தின் போது பாரதீய ஜனதா தனது அனைத்து எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அண்டை மாநிலங்களை சேர்ந்த முதல்-மந்திரிகளையும் பிரசாரத்துக்கு கொண்டு வந்தது. ஆனால் அவர்கள் அனைவரையும் தனி ஆளாக எதிர் கொண்டு அரவிந்த் கெஜ்ரிவால் வெற்றி பெற்றுவிட்டார்.

    பாரதீய ஜனதாவின் பிரித்தாளும் சூழ்ச்சியில் விழுந்து விடாமல் டெல்லி மக்கள் வாக்களித்து உள்ளனர். டெல்லியின் சட்டம்- ஒழுங்கு மத்திய உள்துறை அமைச் சகத்தின் கீழ் இருப்பது ஆம் ஆத்மி கட்சிக்கு தேர்தலில் பயனளித்து விட்டது.

    பாஜக

    டெல்லியில் மோசமான சட்டம்-ஒழுங்கு குறித்து பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷாவை குற்றம் சாட்டியதன் மூலம் அரவிந்த் கெஜ்ரிவால் வெற்றி பெற்றார். மேலும் டெல்லியில் கல்வி, சுகாதாரம், போக்குவரத்து சேவைகளை மேம்படுத்துவதில் அவர் மேற்கொண்ட முயற்சிகளுக்கு பலன் கிட்டி உள்ளது.

    ஆம் ஆத்மியின் இந்த வெற்றியின் மூலம் அரவிந்த் கெஜ்ரிவாலை எதிர்கொள்ள வழிதெரியாமல் பாரதீய ஜனதா குழம்பி போய் உள்ளது. மராட்டியத்தில் பாரதீய ஜனதாவுக்கு முதல்-மந்திரி பதவி கிடைக்காமல் போனது மற்றும் டெல்லி சட்டசபை தேர்தல் தோல்வி அமித்ஷாவை மிகுந்த வேதனைக்கு உள்ளாக்கி இருக்கும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
    Next Story
    ×