search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மணீஷ் சிசோடியா வெற்றி ஊர்வலம்
    X
    மணீஷ் சிசோடியா வெற்றி ஊர்வலம்

    டெல்லி தேர்தல் முடிவுகள்- நீண்ட நேர பின்னடைவுக்கு பிறகு வெற்றி பெற்ற மணீஷ் சிசோடியா

    டெல்லி சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் படிப்படியாக வெளியாகி வருகின்றன. நீண்ட நேரமாக பின்தங்கியிருந்த துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, இறுதியில் பாஜக வேட்பாளரை தோற்கடித்து வெற்றி பெற்றார்.
    புதுடெல்லி:

    டெல்லி சட்டசபைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. இதில் ஆளும் ஆம் ஆத்மி கட்சி, மெஜாரிட்டிக்கு தேவையான இடங்களைவிட அதிக தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளதால், மூன்றாவது முறையாக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடிக்க உள்ளது. பாஜக இரண்டாம் இடத்திற்கு பின்தங்கியது. காங்கிரஸ் ஒரு தொகுதியில் கூட முன்னிலை பெறவில்லை. 

    ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய தலைவர்கள் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றிருந்த நிலையில், துணை முதல்வர் மணீஷ் சிசோடியா (வயது 48), பத்பர்கஞ்ச் தொகுதியில் பின்தங்கினார். நீண்ட நேரம் அவர் பின்தங்கியிருந்ததால் அவரது வெற்றி கேள்விக்குறியாகவே இருந்தது. அவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் ரவீந்தர் சிங் நெகி, ஒரு கட்டத்தில் 2 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருந்தார். அதன்பின்னர் இந்த வாக்கு வித்தியாசம் படிப்படியாக குறைந்தது.

    பிற்பகல் 2 மணிக்கு பிறகு நிலவரம் தலைகீழாக மாறியது. இறுதிக்கட்ட சுற்றுகளில் மணீஷ் சிசோடியா முன்னிலை பெறத் தொடங்கினார். வாக்கு எண்ணிக்கை முடிவில் மணீஷ் சிசோடியா, 2 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்த வெற்றியைத் தொடர்ந்து கட்சி தொண்டர்கள் மிகுந்த உற்சாகமடைந்தனர். 

    பத்பர்கஞ்ச் தொகுதியில் மீண்டும் வெற்றி பெற்று எம்எல்ஏ ஆனது தனக்கு மகிழ்ச்சி அளிப்பதாக கூறினார். பாஜக வெறுப்பு அரசியலை செய்ய முயன்றது, ஆனால் மக்களுக்காக பணியாற்றும் ஒரு அரசாங்கத்தை  டெல்லி மக்கள் தேர்வு செய்துள்ளனர் என்றும் சிசோடியா கூறினார். அதன்பின்னர் மணீஷ் சிசோடியா தனது ஆதரவாளர்களுடன் ஊர்வலமாக சென்றார். 
    Next Story
    ×