search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வாக்களிப்பதற்காக வரிசையில் காத்திருந்த வாக்காளர்கள்
    X
    வாக்களிப்பதற்காக வரிசையில் காத்திருந்த வாக்காளர்கள்

    டெல்லி சட்டசபை தேர்தல்- 10 மணி வரை 4.33 சதவீத வாக்குகள் பதிவு

    டெல்லி சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், முதல் இரண்டு மணி நேரத்தில் 4.33 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன.
    புதுடெல்லி:

    தலைநகர் டெல்லியில் இன்று சட்டசபை தேர்தல் நடைபெற்று வருகிறது. மொத்தம் உள்ள 70 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக இன்று காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. 

    காலையில் வாக்குப்பதிவு மந்தமாகவே இருந்தது. முதல் இரண்டு மணி நேரத்தில் 4.33 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன. அதன்பின்னர் வாக்குப்பதிவு விறுவிறுப்படைந்தது. வாக்குச்சாவடிகளில் நீண்ட வரிசையில் வாக்காளர்கள் காத்திருந்ததை காண முடிந்தது.

    குடும்பத்தினருடன் வந்து வாக்களித்த கெஜ்ரிவால்

    அரசியல் தலைவர்கள், வேட்பாளர்கள் காலையிலேயே தங்கள் வாக்கை பதிவு செய்தனர். முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது குடும்பத்தினருடன், சிவில் லைன்ஸ் பகுதியில் உள்ள வாக்குச்சாவடிக்கு வந்து ஓட்டு போட்டார். 

    இந்த தேர்தலில் மொத்தம் 672 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 1.47 கோடி வாக்காளர்கள் உள்ளனர். மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. 11ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.
    Next Story
    ×