search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர்
    X
    இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர்

    கொரோனா அறிகுறி: 80 இந்திய மாணவர்கள் விமானத்தில் ஏற அனுமதிக்கப்படவில்லை - வெளியுறவுத்துறை மந்திரி

    வுகானில் உள்ள 80 இந்திய மாணவர்கள் வைரஸ் அறிகுறிகள் இருப்பதாக அவர்கள் விமானத்தில் ஏற அனுமதிக்கப்படவில்லை என இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
    புதுடெல்லி:

    கொரோனா வைரஸ் தாக்குதலுக்குப் பிறகு  நமது அண்டை நாடுகளைச் சேர்ந்தவர்களையும் சீனாவில் இருந்து பத்திரமாக கொண்டு வர தயார் என்று அறிவித்த போதிலும், மாலத்தீவைச் சேர்ந்த 7 பேர் மட்டுமே அதற்கு முன்வந்ததாக வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக மாநிலங்களவையில் பதிலளித்த அவர், தற்போது இந்திய மாணவர்கள் 80 பேர் வுகானில் இருப்பதாக கூறினார். அவர்களில் 10 பேருக்கு கொரோனா வைரஸ் அறிகுறிகள் இருப்பதாக சந்தேகிக்கப்பட்டதால் விமானத்தில் ஏற அனுமதிக்கப்படவில்லை என்றும், எஞ்சிய 70 பேரும் அங்கேயே தொடர்ந்து தங்க விரும்புவதாகவும் கூறினார். அவர்களை பெய்ஜிங்கில் உள்ள இந்திய தூதரகம் தொடர்ந்து கண்காணித்து வருவதாக தெரிவித்தார்.

    மேலும் கொரோனா தொற்றுக்குப்பிறகு இந்தியாவுக்கு ஆயிரத்து 275 விமானங்களில் வந்த ஒரு லட்சத்து 39 ஆயிரத்து 539 பேருக்கு உடல் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளதாக ஜெய்சங்கர் கூறினார்.
    Next Story
    ×