search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நிர்பயா வழக்கு தொடர்பான குற்றவாளிகள்
    X
    நிர்பயா வழக்கு தொடர்பான குற்றவாளிகள்

    ‘நிர்பயா’ வழக்கு - குற்றவாளிகளை தூக்கில் போட புதிய தேதி கோரி சிறைத்துறை மனு

    ‘நிர்பயா’ வழக்கு குற்றவாளிகளை தூக்கில் போட புதிய தேதி அறிவிக்கக்கோரி சிறைத்துறை மனு தாக்கல் செய்துள்ளது. அந்த மனு, டெல்லி கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வருகிறது.
    புதுடெல்லி:

    கடந்த 2012-ம் ஆண்டு டெல்லியில் மருத்துவ மாணவி ஒருவர் (நிர்பயா) ஓடும் பஸ்சில் பாலியல் பலாத்காரம் செய்து, கொல்லப்பட்டார். இவ்வழக்கின் குற்றவாளிகளான முகே‌‌ஷ்குமார் சிங், பவன்குமார் குப்தா, வினய்குமார் சர்மா, அக்‌‌ஷய்குமார் சிங் ஆகிய 4 பேருக்கு டெல்லி விசாரணை கோர்ட்டு மரண தண்டனை விதித்தது. இந்த தண்டனையை டெல்லி ஐகோர்ட்டும், தொடர்ந்து சுப்ரீம் கோர்ட்டும் உறுதி செய்தன.

    ஆனால் குற்றவாளிகள் 4 பேரும் கருணை மனு, மறுஆய்வு மனு, சீராய்வு மனு ஆகியவற்றை மாறி, மாறி தாக்கல் செய்த காரணத்தால் இவர்களது தூக்குத்தண்டனை 2 முறை தள்ளிப்போனது.

    தூக்கில் போடுவதற்கான தடை உத்தரவை டெல்லி கூடுதல் செசன்சு கோர்ட்டு பிறப்பித்தது. இதனை எதிர்த்து மத்திய உள்துறை அமைச்சகமும், டெல்லி சிறைத்துறையும் டெல்லி ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தன.

    ஆனால் இந்த மேல்முறையீட்டு மனுக்கள் ஐகோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டன. இருப்பினும், குற்றவாளிகள் தங்களுக்கு அளிக்கப்பட்ட சட்டரீதியான உரிமைகளை ஒரு வாரத்துக்குள் பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்று ஐகோர்ட்டு ‘கெடு’ விதித்தது. மேலும், ‘‘சட்ட உரிமைகளை காரணம் காட்டி குற்றவாளிகள் தொடர்ந்து காலம் தாழ்த்த முடியாது. இந்த ஒருவார ‘கெடு’வுக்கு பிறகு அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்கலாம்’’ என்றும் தீர்ப்பில் கூறப்பட்டு இருந்தது.

    டெல்லி ஐகோர்ட்டின் இந்த தீர்ப்பை எதிர்த்து, மத்திய அரசு மற்றும் சிறைத்துறை தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் நேற்று முன்தினம் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

    இந்நிலையில், நேற்று சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வு முன்பு ஆஜராகி இந்த மனுவை அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என்று முறையிட்டார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் இந்த வழக்கை இன்று (வெள்ளிக்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக தெரிவித்தனர்.

    இதற்கிடையே, நேற்று டெல்லி சிறைத்துறை தரப்பில் டெல்லி கூடுதல் செசன்ஸ் கோர்ட்டில் புதிய மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் குற்றவாளிகள் நால்வரையும் தூக்கில் போடுவதற்கான புதிய தேதி ஒன்றை அறிவிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    இந்த மனு, கூடுதல் செசன்ஸ் நீதிபதி தர்மேந்தர் ராணா முன்னிலையில் விசாரிக்கப்பட்டது. விசாரணை தொடங்கியதும், குற்றவாளிகள் நால்வருக்கும் இந்த மனுவின் மீது பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு வழக்கை இன்றைக்கு விசாரிப்பதாக கூறி, நீதிபதி தள்ளிவைத்தார். 
    Next Story
    ×