search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஸ்ரீ ராமர்
    X
    ஸ்ரீ ராமர்

    தேர்தலில் பாஜக கூடுதலான இலக்கங்களை பெற ஸ்ரீ ராமர் உதவட்டும்- சிவசேனா கிண்டல்

    கடந்த முறையை விட தேர்தலில் பாஜக சற்று கூடுதலான இலக்கங்களை பெறுவதற்கு ஸ்ரீ ராமர் உதவட்டும் என சிவசேனா கட்சியின் சாம்னா பத்திரிகை கடுமையாக தாக்கியுள்ளது.
    மும்பை:

    தலைநகர் டெல்லியில் சட்டசபை தேர்தல் நாளை மறுதினம் நடைபெற உள்ளது. ஆட்சியை தக்கவைக்க ஆம் ஆத்மி கட்சியும், ஆட்சியை கைப்பற்றி பா.ஜ.க.வும் தீவிரமாக களப்பணி ஆற்றி வருகின்றன. 

    இன்று மாலையுடன் டெல்லி தேர்தல் பிரசாரம் முடிவடைய உள்ளதால் ஆம் ஆத்மி, பா.ஜ.க., காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன.

    இந்நிலையில், டெல்லி சட்டசபை தேர்தலில் கடந்த முறையை விட பா.ஜ.க. சற்று கூடுதலான இலக்கங்களை பெறுவதற்கு ஸ்ரீ ராமர் உதவட்டும் என சிவசேனா கட்சியின் சாம்னா பத்திரிகை கடுமையாக தாக்கியுள்ளது.

    இதுதொடர்பாக, சிவசேனா கட்சியின் பத்திரிகையான சாம்னாவில் கூறியுள்ளதாவது:

    தலைநகர் டெல்லியில் 70 இடங்களுக்கான சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு 4 நாள் மீதமுள்ள நிலையில், மக்களவையில் 
    பிரதமர் மோடி அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான அறக்கட்டளையை அறிவித்துள்ளார்.

    தேர்தலை கருத்தில் கொண்டே பிரதமர் மோடி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதன்மூலம் தேர்தலில் கடந்த முறையை விட கூடுதல் இடங்களை அக்கட்சி பெறுவதற்கு ஸ்ரீராமர் உதவட்டும்.

    ராமர் கோவில் விவகாரத்தை நாங்கள் அரசியலாக்க விரும்பவில்லை என பாஜகவினர் கூறி வருகின்றனர். ஆனாலும், தேர்தலுக்காகவே ராமர் கோவில் பற்றிய அறிவிப்பை பா.ஜ.க. வெளியிட்டுள்ளது என கடுமையாக குற்றம்சாட்டியுள்ளது.
    Next Story
    ×