search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிரியங்கா காந்தி (கோப்பு படம்)
    X
    பிரியங்கா காந்தி (கோப்பு படம்)

    நாம் சுதந்திர நாட்டில் தான் வாழ்கிறோமா? பிரியங்கா காந்தி கேள்வி

    காஷ்மீரில் அரசியல் தலைவர்கள் 6 மாதங்களாக வீட்டுச்சிறையில் வைக்கப்பட்டு நிலையில் நாம் சுதந்திர நாட்டில் தான் வாழ்கிறோமா? என பிரியங்கா காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
    புதுடெல்லி:

    காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5-ம் தேதி ரத்து செய்தது. மேலும், அப்பகுதியை ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்து மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தது. 

    இந்த நடவடிக்கையின் போது அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க முன்னாள் முதல்மந்திரிகளான பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா, மெகபூபா முப்தி உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர். 

    இதற்கிடையில், காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு இன்றுடன் 6 மாதங்கள் நிறைவடைந்துள்ளது. இதையடுத்து காஷ்மீரில் வீட்டுக்காவலில் உள்ள அரசியல் தலைவர்களை மத்திய அரசு உடனடியாக விடுதலை செய்யவேண்டுமென பல அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். 

    இந்நிலையில், காஷ்மீரில் அரசியல் தலைவர்கள் வீட்டுச்சிறையில் வைக்கப்பட்டுள்ளது குறித்து காங்கிரஸ் கட்சியின் பிரியங்கா காந்தி கருத்து தெரிவித்துள்ளார். 

    இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

     ''காஷ்மீரில் இரண்டு முன்னாள் முதல்மந்திரிகள் எந்தவித குற்றச்சாட்டுகளும் பதியப்படாமல் 6 மாதங்களாக சிறையில் வைக்கப்பட்டுள்ளனர். லட்சக்கணக்கான மக்களும் காஷ்மீரில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். 

    6 மாதங்களுக்கு முன்னர் இது எத்தனை காலம் தொடரும் என கேள்வி எழுப்பினோம். ஆனால் தற்போது நாம் இன்னும் சுதந்திர நாட்டில் தான் இருக்கிறோமா? அல்லது இல்லையா? என்ற கேள்வி எழுப்புகிறோம்’’ என அவர் பதிவிட்டுள்ளார்.
    Next Story
    ×