என் மலர்

  செய்திகள்

  ராகுல் காந்தி
  X
  ராகுல் காந்தி

  பிரதமர் மோடி தாஜ்மஹாலை கூட ஒரு நாள் விற்று விடக்கூடும் - ராகுல்காந்தி கிண்டல்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பிரதமர் மோடி தாஜ்மஹாலை கூட ஒரு நாள் விற்று விடக்கூடும் என்று டெல்லி தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் ராகுல்காந்தி பேசியுள்ளார்.
  புதுடெல்லி:

  காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று புதுடெல்லி  ஜங்புராவில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.  அப்போது பிரதமர் மோடியை  தாக்கி பேசினார். மோடி  ஒரு நாள் தாஜ்மஹாலை விற்கக்கூடும் என்று கூறினார்.

  மேலும் அவர் பேசும்போது கூறியதாவது:-

  பிரதமர் மோடி மேக் இன் இந்தியா என்ற நல்ல கோஷத்தை உருவாக்கினார், ஆனால் உத்தரப்பிரதேசம் ஆக்ராவில் ஒரு தொழிற்சாலையை அமைக்கவில்லை. 

  பிரதமர் மோடி எல்லாவற்றையும் விற்பனை செய்கிறார் அவர் ஒரு நாள் தாஜ்மஹாலைக் கூட விற்கக்கூடும்.
  பிரதமர் மோடி.
  பிரதமர் மோடிக்கு மதம் குறித்த புரிதல் இல்லை. வன்முறை குறித்து புனித நூல்கள் எதுவும் பேசவில்லை.

  பாரதீய ஜனதா கட்சி வன்முறையை பரப்புவதை வேலையாக செய்து வருகிறது என கூறினார்.
  Next Story
  ×