என் மலர்

  செய்திகள்

  விபத்துக்குள்ளான பஸ்
  X
  விபத்துக்குள்ளான பஸ்

  அசாமில் சாலையோர பள்ளத்தில் பஸ் கவிழ்ந்து விபத்து - 6 பேர் பலி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  அசாமில் இன்று சாலையோர பள்ளத்தில் பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் 6 பேர் உயிரிழந்தனர்.
  கவுகாத்தி:

  அசாம் மாநிலம் டுஹுப்ரி பகுதியில் இருந்து தலைநகர் கவுகாத்தி நோக்கி இன்று பஸ் ஒன்று வந்து கொண்டிருந்தது. அந்த பஸ்சில் 36 பேர் பயணம் செய்தனர்.

  கோல்பூரா மாவட்டம் டுஹுப்ஹாரா என்ற பகுதியை கடந்த போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் சாலையின் அருகே இருந்த மின்கம்பம் மீது பயங்கர வேகத்தில் மோதி அருகே இருந்த பள்ளத்தில் தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

  இந்த விபத்தில் பஸ்சில் பயணம் செய்த 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் விபத்துக்குள்ளான பஸ்சில் சிக்கித்தவித்த 30 பேரை பத்திரமாக மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

  Next Story
  ×