என் மலர்

  செய்திகள்

  வைரல் வீடியோ ஸ்கிரீன்ஷாட்
  X
  வைரல் வீடியோ ஸ்கிரீன்ஷாட்

  இது தான் கொரோனா உருவாக காரணமா?

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கொரோனா வைரஸ் உருவாக இது தான் காரணம் என கூறி வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.  சீனாவில் துவங்கி உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் உருவாக இது தான் காரணம் என கூறி வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மூன்று நிமிடங்கள் ஓடும் வைரல் வீடியோவில், வீடு ஒன்றின் மேற்கூரை ஓடுகளை சுத்தம் செய்யும் போது நூற்றுக்கணக்கான வௌவ்வால்கள் பறக்கும் காட்சிகள் இடம்பெற்றிருக்கின்றன.

  சமூக வலைதளங்களில் வைரலாகும் வௌவ்வால் வீடியோ, கொரோனா வைரஸ் உருவான விதம் கண்டறியப்பட்டு விட்டது. "சீனாவின் ஹூபெய் பகுதியில் உள்ள பல்வேறு வீட்டு மேற்கூரைகளில் க்ரிசந்தெமம் வகை வௌவ்வால்கள் வசித்து வருகின்றன" எனும் தலைப்பில் பகிரப்படுகிறது. இந்த வீடியோ ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் தளங்களில் இதே தலைப்பில் பகிரப்படுகிறது. 

  வீடியோவை ஆய்வு செய்ததில், இந்த வீடியோ 2011-ம் ஆண்டு எடுக்கப்பட்டது என உறுதியாகி இருக்கிறது. மேலும் இந்த வீடியோ அமெரிக்காவின் ஃபுளோரிடா பகுதியில் எடுக்கப்பட்டது என தெரியவந்துள்ளது. அந்த வகையில் இந்த வீடியோ சீனாவில் எடுக்கப்படவில்லை என தெளிவாகிவிட்டது.

  வைரல் பதிவு ஸ்கிரீன்ஷாட்

  உண்மையில் இந்த வீடியோவினை மியாமியை சேர்ந்த கட்டிட காண்டிராக்டர் ஒருவர் பதிவேற்றம் செய்தார். இந்த வீடியோவில் பணியாளர்கள் ஸ்பானிஷ் மொழியில் உரையாடும் ஆடியோ கேட்கிறது. எனினும், வைரல் வீடியோவில் ஆடியோவிற்கு மாற்றாக பின்னணி இசை சேர்க்கப்பட்டுள்ளது.

  கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இதுவரை பலநூறு பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி கொரோனா வைரஸ் ஹூபெய் மாவட்டத்தில் அமைந்துள்ள ஹூனான் கடல்உணவு சந்தையில் இருந்து பரவியதாக கருதப்படுகிறது. இந்த நகரில் சுமார் ஒரு கோடி பேர் வசித்து வருகின்றனர். அந்த வகையில் வைரல் வீடியோவுடன் உலா வரும் தகவலில் உண்மையில்லை என்பது உறுதியாகிவிட்டது.

  போலி செய்திகளை பரப்பாதீர்கள். வலைதளங்களில் வரும் தகவல்களின் உண்மைத்தன்மை தெரியாமல் அவற்றை பரப்ப வேண்டாம். சமயங்களில் போலி செய்திகளால் உயிரிழப்பு உள்பட பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன.
  Next Story
  ×