என் மலர்

  செய்திகள்

  கோப்பு படம்
  X
  கோப்பு படம்

  ஜம்முவில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து - விமானிகள் உயிர்தப்பினர்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஜம்முவில் ராணுவ ஹெலிகாப்டர் தரையில் விழுந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் அதில் பயணம் செய்த இரு விமானிகளும் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்.
  ஜம்மு:

  ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசம் ஜம்மு பகுதியில் இன்று இந்திய ராணுவத்திற்கு சொந்தமான ஹெலிகாப்டர் சென்று கொண்டிருந்தது. அதில் இரண்டு விமானிகள் பயணம் செய்தனர். 

  ரியாசி மாவட்ட பகுதியில் ஹெலிகாப்டர் பறந்து கொண்டிருந்தபோது விமானியின் கட்டுப்பாட்டை இழந்து தரையில் விழுந்து விபத்துக்குள்ளானது. 

  இந்த விபத்தில் ஹெலிகாப்டரில் பயணம் செய்த இரண்டு விமானிகளும் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பாதுகாப்புத்துறை அதிகாரிகள் இந்த விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளனர்.  
  Next Story
  ×