என் மலர்

  செய்திகள்

  இ விசா (கோப்புப் படம்)
  X
  இ விசா (கோப்புப் படம்)

  கொரோனா எதிரொலி: சீனர்களுக்கு இ- விசாவை ரத்து செய்தது மத்திய அரசு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, சீனர்களுக்கு இ-விசா வழங்கும் நடைமுறையை மத்திய அரசு தற்காலிகமாக நிறுத்திவைத்து உள்ளது.
  புதுடெல்லி:

  உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பற்றி நாம் அனைவரும் அறிந்ததே. சுவாசக் கோளாறுகளை ஏற்படுத்தி, உயிரைக் குடிக்கும் கொரோனாவால் சீனாவில் மட்டும் இதுவரை 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரசின் தாக்கம் அதிகரித்து வருவதை அடுத்து உலக நாடுகள் அனைத்தும் மருத்துவ முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. 

  உலக நாடுகள் அனைத்தும் சீனாவில் உள்ள தங்களது குடிமக்களின் பாதுகாப்பில் கவனம் செலுத்தி வருகின்றன. மேலும் குடிமக்கள் யாரும் சீனாவிற்கு செல்லவேண்டாம் எனவும் அறிவுறுத்தியுள்ளது. 

  இந்தியாவை பொறுத்தவரையில் கேரளா மாநிலத்தில் 3 பேருக்கு கொரோனா வைரஸ் தாக்குதல் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. சீனாவின் உகான் நகரில் இருந்த சுமார் 500 இந்தியர்களை மத்திய அரசு போயிங் 747 ரக விமானம் மூலம் டெல்லி அழைத்து வந்துள்ளது. அவர்கள் அனைவரும் டெல்லியில் மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர்.   

  இந்நிலையில், கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க, சீனர்களுக்கு இ-விசா வழங்கும் நடைமுறையை மத்திய அரசு தற்காலிகமாக  நிறுத்திவைத்து உள்ளது.

  இ-விசாவை பொறுத்தமட்டில் சீன நாட்டினரோ, அங்குள்ள பிற நாட்டினரோ இந்திய தூதரகத்துக்கு செல்லாமல் ஆன்லைன் முறையில் வீட்டில் இருந்துகொண்டே விண்ணப்பிக்கலாம். ஆன்லைனில் விண்ணப்ப கட்டணத்தை செலுத்த வேண்டும். ஆன்லைன் விசா விண்ணப்பம் ஏற்கப்பட்டு விட்டால், விண்ணப்பித்தவருக்கு இ-மெயிலில் தெரிவிக்கப்படும். அவர்கள் அதை வைத்துக்கொண்டு இந்தியா வரலாம். இந்தியா வந்த பின் அதில் முத்திரை குத்தப்படும் என்பது நடைமுறை.

  இந்த இ-விசா நடைமுறையைத்தான் மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது.

  ஏற்கனவே சீனர்கள் தங்கள் நாடுகளில் நுழைவதற்கு அமெரிக்காவும், ஆஸ்திரேலியாவும் தடை விதித்துள்ளன. நியூசிலாந்து, ரஷியா, ஜப்பான், பாகிஸ்தான், இந்தோனேசியா, சிங்கப்பூர், இத்தாலி ஆகிய நாடுகள் பயண கட்டுப்பாடுகள் விதித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. 
  Next Story
  ×