search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சித்தராமையா
    X
    சித்தராமையா

    பிரதமர் மோடியின் ஆட்சியில் மனிதநேயத்திற்கு மதிப்பு இல்லை: சித்தராமையா

    பிரதமர் மோடியின் ஆட்சியில் மனிதநேயத்திற்கு மதிப்பு இல்லை. அரசியல் சாசனத்திற்கு எதிராக செயல்படும் பா.ஜனதாவினரை என்னவென்று அழைப்பது? என்று சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா கூறினார்.
    பெங்களூரு :

    குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான கருத்தரங்கு மைசூருவில் நடைபெற்றது. இதில் சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா கலந்து கொண்டு பேசியதாவது:-

    ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் யாரும் சுதந்திர போராட்டத்தில் பங்கேற்கவில்லை. நாட்டிற்காக அந்த அமைப்பினர் யாரும் எந்த தியாகமும் செய்யவில்லை. அந்தமான் சிறையில் அடைக்கப்பட்டிருந்த சாவர்க்கர், நான் இனிமேல் தவறு செய்ய மாட்டேன், என்னை விடுதலை செய்யுங்கள் என்று ஆங்கிலேய அரசுக்கு கடிதம் எழுதினார். அவர், ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் ஆராத்திய தெய்வம். நாட்டுக்கு சேவை ஆற்றியதில் சாவர்க்கரின் பங்களிப்பு பூஜ்ஜியம்.

    அவருடைய பெயர் தாமோதர சாவர்க்கர். ஆனால் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் வீர சாவர்க்கர் என்று பெயரிட்டுள்ளனர். அவர் சுதந்திரத்திற்காக போராடி சிறைக்கு செல்லவில்லை. இங்கிலாந்து நண்பருடன் அவருக்கு இருந்த பிரச்சினைக்காக அவர் சிறையில் தள்ளப்பட்டார்.

    பிரதமர் மோடி

    குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து எனது சொந்த ஊரான மைசூருவில் சித்தராமையா போராட்டம் நடத்தவில்லையே என்று பா.ஜனதாவை சேர்ந்த பி.எல்.சந்தோஷ் கேட்டுள்ளார். அவர் மைசூருவுக்கு வந்து பொய்யான தகவல்களை கூறிவிட்டு சென்றுள்ளார். பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு கொடூரமாக நடந்து கொள்கிறது.

    பிரதமர் மோடியின் ஆட்சியில் மனிதநேயத்திற்கு மதிப்பு இல்லை. குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடியுரிமை பதிவேட்டை எதிர்ப்பவர்கள் தேசதுரோகிகள் என்று பா.ஜனதாவினர் கூறுகிறார்கள். அப்படி என்றால் அரசியல் சாசனத்திற்கு எதிராக செயல்படும் பா.ஜனதாவினரை என்னவென்று அழைப்பது?.

    இவ்வாறு சித்தராமையா பேசினார்.
    Next Story
    ×