என் மலர்

  செய்திகள்

  மாடியில் இருந்து குதித்து பி.டெக் மாணவி மரணம்
  X
  மாடியில் இருந்து குதித்து பி.டெக் மாணவி மரணம்

  ஆந்திரா: கல்லூரி விடுதியின் நான்காவது மாடியில் இருந்து குதித்து பி.டெக் மாணவி மரணம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஆந்திரா மாநிலம், கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள பொறியியல் கல்லூரி விடுதியின் நான்காவது மாடியில் இருந்து கீழே குதித்து 19 வயது பி.டெக் மாணவி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
  அமராவதி:

  ஆந்திரா மாநிலம், கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் காக்கிநாடா அருகே சுமார் 30 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள சூரம்பாலேம் பகுதியில் ஆதித்யா பொறியியல் கல்லூரி அமைந்துள்ளது.

  தன்னாட்சி அதிகாரம் பெற்ற இந்த தனியார் கல்லூரியில் மேற்கு கோதாவரி மாவட்டம், ஜங்காரெட்டிகுடெம் பகுதியை சேர்ந்த கிலுக்குரி அலேக்யா (19) என்ற மாணவி கல்லூரி விடுதியில் தங்கியவாறு இரண்டாம் ஆண்டு பி.டெக் படித்து வந்தார்.

  இந்நிலையில், விடுமுறை நாளான இன்று காலை, விடுதியின் நான்காவது மாடிக்கு சென்ற அலேக்யா, அங்கிருந்து திடீரென்று கீழே குதித்தார். தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, ரத்த வெள்ளத்தில் துடித்த அவர் ஆம்புலன்ஸ் மூலம் அருகாமையில் உள்ள டிரஸ்ட் மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டார்.

  அலேக்யாவை பரிசோதித்த மருத்துவர்கள் ஆம்புலன்சில் வரும் வழியிலேயே அவரது உயிர் பிரிந்துவிட்டதாக தெரிவித்தனர். இச்சம்பவம் தொடர்பாக தகவலறிந்து விரைந்து வந்த போலீசார், அலேக்யாவின் உடலை கைப்பற்றி, பிரேதப்பரிசோதனைக்காக பெத்தாப்புரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

  தனது மனதுக்கு பிடித்த வாழ்க்கை துணைவருக்கு திருமணம் செய்துவைக்க பெற்றோர் மறுத்து விட்டதால் இந்த விபரீத முடிவை அலேக்யா தேர்ந்தெடுத்ததாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
  Next Story
  ×