search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நிதி மந்திரி நிர்மலா சீதாராமன்
    X
    நிதி மந்திரி நிர்மலா சீதாராமன்

    மத்திய பட்ஜெட்டில் வருமான வரி விகிதங்கள் குறைப்பு - வரிவிலக்கு உச்சவரம்பில் மாற்றமில்லை

    பாராளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்த நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், மத்திய பட்ஜெட்டில் வருமான வரி விகிதங்கள் குறைக்கப்படடு உள்ளது என தெரிவித்தார்.
    புதுடெல்லி:

    மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பாராளுமன்றத்தில் இந்த நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:

    தனிநபர் வருமானம் 5 லட்சம் ரூபாய் இருந்தால் வருமான வரி செலுத்த தேவையில்லை.

    5 லட்சம் முதல் 7.5 லட்சம் ரூபாய் வரை வருமானம் இருந்தால் 20 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாக வரி குறைப்பு.

    7.5 லட்சம் முதல் 10 லட்சம் ரூபாய் வரை வருமானம் இருந்தால் 20 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக வரி குறைக்கப்பட்டு உள்ளது.

    10 லட்சம் முதல் 12.5 லட்சம் ரூபாய் வருமானம் இருந்தால்  30 சதவீதத்தில் இருந்து 20 சதவீதமாக வரி குறைப்பு 

    12.5 லட்சம் முதல் 15 லட்சம் வரி வருமானம் இருந்தால் 30 சதவீதத்தில் இருந்து 25 சதவீதமாக குறைப்பு 

    15 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக வருமானம் இருந்தால் 30 சதவீதம் என்பதில் எவ்வித மாற்றமும் இல்லை.

    இந்த வருமான வரி குறைப்பு நடவடிக்கையால் மத்திய அரசுக்கு சுமார் 40 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் என தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×