search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குழந்தைகள் அடைத்துவைக்கப்பட்ட வீடு, குழந்தையை மீட்கும் போலீஸ்
    X
    குழந்தைகள் அடைத்துவைக்கப்பட்ட வீடு, குழந்தையை மீட்கும் போலீஸ்

    23 குழந்தைகளை பிணைக்கைதிகளாக பிடித்து வைத்த தம்பதியர் - சுட்டுப்பிடித்த உ.பி. போலீஸ்

    உத்தர பிரதேசத்தில் தம்பதியினரால் பிணைக்கைதிகளாக வைக்கப்பட்ட 23 குழந்தைகளை 8 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் போலீசார் பத்திரமாக மீட்டனர்.
    லக்னோ:

    உத்திர பிரதேச மாநிலம் பரூகாபாத் மாவட்டம் கசரியா கிராமத்தை சேர்ந்தவர் சுபாஷ் பாத்தம். கொலை குற்றவாளியான இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் ஒரு பெண் குழந்தை உள்ளது. 

    இதற்கிடையில், தனது குழந்தைக்கு பிறந்தால் என கூறி நேற்று (வியாழக்கிழமை) அக்கிராமத்தில் உள்ள குழந்தைகளை பிறந்தநாள் நிகழ்ச்சியில் பங்கேற்க வருமாறு அழைப்பு விடுத்துள்ளார். 

    இந்த அழைப்பை ஏற்று அக்கிராமத்தில் உள்ள மக்கள் சிலர் தங்கள் குழந்தைகளை சுபாஷ் வீட்டிற்கு அனுப்பிவைத்துள்ளனர். ஆறு மாதம் முதல் 15 வயது வரையிலான மொத்தம் 23 குழந்தைகள் இந்த பிறந்தநாள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். 

    ஆனால், மாலை 5.30 மணியளவில் குழந்தைகள் தங்கள் வீட்டிற்கு செல்ல முயற்சித்தபோது சுபாஷ் மற்றும் அவரது மனைவி இருவரும் இணைந்து 23 குழந்தைகளையும் பிணைக்கைதிகளாக வீட்டிற்குள் அடைத்துவைத்தனர். 

    குழந்தைகள் பிணைக்கைதிகளாக அடைத்து வைக்கப்பட்டது குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சுபாஷிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட முயற்சித்தனர். ஆனால், போலீசாருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட மறுத்த சுபாஷ் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினார். 

    கொல்லப்பட்ட சுபாஷ் பாத்தம்

    இந்த துப்பாக்கிச்சூட்டில் இரண்டு போலீசார் உள்பட 3 பேர் படுகாயமடைந்தனர். தொடர்ந்து நடைபெற்ற பேச்சுவார்த்தையின் இறுதியில் 6 மாத குழந்தையை சுபாஷ் முதலில் விடுதலை செய்தார். ஆனால், மற்ற குழந்தைகளை பேச்சுவார்தை மூலம் மீட்கும் போலீசாரின் முயற்சி தோல்வியில் முடிந்தது.

    இதையடுத்து, வீட்டிற்குள் இரவு 1 மணியளவில் அதிரடியாக நுழைந்த போலீசார் சுபாஷ் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி பிணைக்கைதிகளாக இருந்த 23 குழந்தைகளை பத்திரமாக மீட்டனர்.

    8 மணி நேரத்திற்கும் அதிகமாக நடைபெற்ற இந்த மீட்பு நடவடிக்கையின்போது போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் சுபாஷ் உயிரிழந்தார். 

    சுபாஷின் மனைவி வீட்டில் இருந்து தப்பிக்க முயற்சி செய்தபோது கிராம மக்கள் தாக்கியதில் அவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.  

    இதற்கிடையில், பரூகாபாத் சம்பவத்தில் சிறப்பாக செயல்பட்டு 23 குழந்தைகளையும் பத்திரமாக மீட்ட போலீசாருக்கு உத்திர பிரதேசம் மாநில முதல்மந்திரி யோகி ஆதித்யநாத், உள்துறை மந்திரி அமித்ஷா ஆகியோர் பாராட்டு தெரிவித்துள்ளனர்.  
    Next Story
    ×