search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தேர்தல் அறிக்கையை வெளியிட்ட பாஜக தலைவர்கள்
    X
    தேர்தல் அறிக்கையை வெளியிட்ட பாஜக தலைவர்கள்

    மாணவிகளுக்கு இலவச ஸ்கூட்டி, அனைத்து வீடுகளுக்கும் தூய குடிநீர் - பாஜக தேர்தல் அறிக்கை

    டெல்லி சட்டசபைக்கான தேர்தல் அறிக்கையை பாஜக இன்று வெளியிட்டது. மாணவிகளுக்கு இலவச ஸ்கூட்டி, அனைத்து வீடுகளுக்கும் தூய குடிநீர் உள்பட பல்வேறு வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளது.
    புதுடெல்லி:

    தலைநகர் டெல்லியில் பிப்ரவரி 8-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. இத்தேர்தலில் ஆளும் கட்சியான ஆம் ஆத்மி கட்சியை வீழ்த்துவதற்கான வியூகம் வகுத்து பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் செயல்படுகின்றன. 

    இதற்கிடையே, பாஜக சார்பில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு தீவிர பிரசாரமும் நடைபெற்று வருகிறது, பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா, பாஜக தேசிய தலைவர் ஜே பி நட்டா உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  

    இந்நிலையில், டெல்லி சட்டசபை தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை பாஜக இன்று வெளியிட்டுள்ளது. கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் மத்திய மந்திரிகள் நிதின் கட்காரி, ஹர்ஷ் வர்தன், டெல்லி பாஜக தலைவர் ,மனோஜ் திவாரி உள்ளிட்டோர் வெளியிட்டனர்.

    அனைத்து வீடுகளுக்கும் தூய குடிநீர் வழங்குவது, கல்லூரி மாணவிகளுக்கு இலவச ஸ்கூட்டி, 9,10ம் வகுப்பு மாணவிகளுக்கு இலவச சைக்கிள் உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகள் வழங்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×