search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாராளுமன்றத்தில் உரையாற்றும் ஜனாதிபதி
    X
    பாராளுமன்றத்தில் உரையாற்றும் ஜனாதிபதி

    பாராளுமன்றத்தில் குடியுரிமை திருத்த சட்டத்தை புகழ்ந்து பேசிய ஜனாதிபதி- எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு

    பாராளுமன்றத்தில் இன்று உரையாற்றிய ஜனாதிபதி, குடியுரிமை திருத்தச் சட்டத்தை புகழ்ந்து பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி எம்பிக்கள் முழக்கம் எழுப்பினர்.
    புதுடெல்லி:

    பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால், பாராளுமன்ற இரு சபைகளின் கூட்டுக்கூட்டத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரையாற்றினார். அவர் பேசும்போது, குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நடைபெறும் வன்முறைப் போராட்டங்கள் குறித்து கவலை தெரிவித்தார்.

    மேலும் குடியுரிமை திருத்தச் சட்டம் வரலாற்று சிறப்பு மிக்க சட்டம் என்றும், கடந்த 7 மாதங்களில் வரலாற்று சிறப்பு மிக்க 7 சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி தனது உரையில் குறிப்பிட்டார்.

    குடியுரிமை திருத்தச் சட்டத்தை ஜனாதிபதி புகழ்ந்து பேசியதால் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் ஆட்சேபம் தெரிவித்தனர். ஜனாதிபதியின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து முழக்கம் எழுப்பினர்.
    Next Story
    ×