search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாஜக எம்.பி. பர்வேஷ் வர்மா
    X
    பாஜக எம்.பி. பர்வேஷ் வர்மா

    நாளை மாலைக்குள் விளக்கமளிக்க வேண்டும் - பாஜக எம்.பி.க்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்

    டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலை பயங்கரவாதி எனக்கூறியது தொடர்பாக நாளை விளக்கமளிக்க வேண்டும் என பாஜக எம்.பி பர்வேஷ் வர்மாவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது.
    புதுடெல்லி:

    தலைநகர் டெல்லியில் பிப்ரவரி 8-ம் தேதி சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் பணிகளில் அரசியல் கட்சிகள் சுறுசுறுப்பாக ஈடுபட்டுள்ளன. மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜக, டெல்லியில் ஆட்சியைப் பிடிக்க தீவிரமாக களப்பணியாற்றி வருகிறது.

    பா.ஜ.க.வின் நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலில் இருந்து மத்திய மந்திரி அனுராக் தாக்கூர், பர்வேஷ் சாகிப் சிங் வர்மா எம்.பி. ஆகியோரின் பெயர்களை நீக்கும்படி தேர்தல் ஆணையம் நேற்று உத்தரவிட்டது.

    இதற்கிடையே, டெல்லி சட்டசபைத் தேர்தலில் மத்திய மந்திரி அனுராக் தாகூர் 72 மணி நேரத்துக்கும், பாஜக எம்பி பர்வேஷ் வர்மா 96 மணி நேரத்துக்கும் பிரசாரம் செய்ய தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.

    இந்நிலையில், டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலை பயங்கரவாதி எனக்கூறியது தொடர்பாக நாளை மாலை 5 மணிக்குள் விளக்கமளிக்க வேண்டும் என பாஜக எம்.பி பர்வேஷ் வர்மாவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது.
    Next Story
    ×