என் மலர்

  செய்திகள்

  ராஜ்நாத் சிங்
  X
  ராஜ்நாத் சிங்

  வெறுப்பு அரசியல் மூலம் டெல்லியில் ஆட்சியை பிடிக்க பாஜக நினைக்கவில்லை - ராஜ்நாத் சிங்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  டெல்லியில் வெறுப்பு அரசியல் மூலம் ஆட்சியை பிடிக்க பாஜக நினைக்கவில்லை என அக்கட்சியின் மூத்த தலைவரான ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
  புதுடெல்லி:

  டெல்லியில் வரும் 8-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் முடிவுகள் வரும் 11-ம் தேதி வெளியிடப்பட உள்ளது. இந்த தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியைத் தக்க வைக்க ஆம் ஆத்மி கட்சி தீவிர களப்பணியாற்றி வருகிறது. அதேசமயம், ஆட்சியைப்பிடிக்க பாஜக தீவிரம் காட்டி வருகிறது.

  இந்நிலையில் டெல்லியில் உள்ள தர்ஷ் நகரில் நேற்று பாஜக சார்பில் தேர்தல் பிரசாரம் நடைபெற்றது. 

  அதில் பங்கேற்ற பாஜக மூத்த தலைவரும், பாதுக்காப்புத்துறை மந்திரியுமான ராஜ்நாத் சிங் பேசியதாவது:-

  வெறுப்பு அரசியல் மூலமாக கிடைக்கும் வெற்றி எங்களுக்கு (பாஜக) தேவையில்லை. ஒருவேளை அவ்வாறு நாங்கள் வெற்றிபெற்றாலும் அந்த வெற்றியை நாங்கள் ஏற்றுக்கொள்ளமாட்டோம். நீங்கள் எங்களுக்கு வாக்களிப்பீர்களா? இல்லையா? என்பது எனக்கு தெரியாது. 

  ஆனால் எங்கள் நேர்மையை நீங்கள் சந்தேகப்பட வேண்டாம் என வேண்டிக்கொள்கிறேன். இந்தியாவில் உள்ள முஸ்லிம் குடிமக்கள் ஒருவரைக்கூட யாரும் தொடமாட்டார்கள் (குடியுரிமை திருத்தச்சட்டம்) என்பதை நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன்.  
  Next Story
  ×