search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வைரல் வீடியோ ஸ்கிரீன்ஷாட்
    X
    வைரல் வீடியோ ஸ்கிரீன்ஷாட்

    இங்கு எடுக்கப்பட்ட வீடியோ அங்கு எடுக்கப்பட்டதாக வைரலாகிறது

    குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவு திரட்டும் வகையில், சமீப நாட்களாக ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.



    சமூக வலைதளங்களில் கடந்த சில தினங்களாக வைரலாகும் வீடியோவில் நபர் ஒருவர் இரண்டு பெண்களை சரமாரியாக தாக்கும் பகீர் காட்சிகள் இடம்பெற்று இருக்கின்றன. இந்த வைரல் வீடியோ பாகிஸ்தானில் இந்து மதத்தினருக்கு ஏற்பட்டுள்ள நிலையை பாருங்கள் எனும் தலைப்பில் பகிரப்பட்டு வருகிறது. அத்துடன் குடியுரிமை திருத்த சட்டத்தை ஆதரிக்கும் ஹேஷ்டேக்கும் இணைக்கப்பட்டுள்ளது. 

    வைரல் வீடியோவில் பெண்களை தாக்கும் நபர், ‘மீண்டும் அங்கு செல்வீர்களா?’ என்ற கேள்வியை கேட்டுக் கொண்டே இருக்கிறார். இதற்கு தாக்குதலுக்கு ஆளான பெண்கள், ‘இல்லை எங்களை மன்னித்து விடு’ என பதில் அளிக்கின்றனர்.

    வீடியோ ஸ்கிரீன்ஷாட்களை ஆய்வு செய்ததில், இந்த வீடியோ 2018-ம் ஆண்டு ஜம்முவின் ரஜோரி மாவட்டத்தில் எடுக்கப்பட்டது என தெரியவந்துள்ளது. அந்த வகையில் வீடியோ பாகிஸ்தானில் எடுக்கப்படவில்லை என்பதும், வீடியோவில் உள்ள பெண்கள் இந்து மதத்தினர் தான் என்பதை உறுதிப்படுத்தும் தகவலில் உண்மையில்லை என உறுதியாகி இருக்கிறது.

    வைரல் பதிவு ஸ்கிரீன்ஷாட்

    இது குறி்த்து வெளியாகி இருக்கும் தகவல்களில் பவன் குமார் என்கிற பம்மா என்பவர் சகினா பேகம் மற்றும் அவரது மகள் அபிதா கௌசர் ஆகியோரை கடுமையாக தாக்குவதாக செய்தி வெளியிடப்பட்டுள்ளது. இதே வீடியோ 2018 ஆண்டிலேயே வைரலாகி, பெண்களை தாக்கும் நபருக்கு தக்க தண்டனை கொடுக்கப்பட வேண்டும் என கோரிக்கை வலுத்தது.

    வீடியோ வைரலானதை தொடர்ந்து பவன் குமார் போலீசாரால் கைது செய்யப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகி இருக்கின்றன. அந்த வகையில் தற்போது புது தகவல்களுடன் வெளியாகும் வைரல் வீடியோவிற்கும் பாகிஸ்தானுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என உறுதியாகிவிட்டது.

    போலி செய்திகளை பரப்பாதீர்கள். வலைத்தளங்களில் வரும் தகவல்களின் உண்மைத்தன்மை தெரியாமல் அவற்றை பரப்ப வேண்டாம். சமயங்களில் போலி செய்திகளால் உயிரிழப்பு உள்பட பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன.
    Next Story
    ×