search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ள துப்புரவு பணியாளர்கள்
    X
    கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ள துப்புரவு பணியாளர்கள்

    கொரோனா வைரஸ் பற்றிய வைரல் பதிவுகளின் உண்மை பின்னணி

    சீனாவை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் சமூக வலைதளம் வாயிலாக இந்தியர்களை அச்சத்தில் ஆழ்த்தி வருகிறது.



    சீனாவில் துவங்கி உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் சமூக வலைதளம் வாயிலாக இந்தியர்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிடப்பட்டதாக கூறும் விழிப்புணர்வு நடவடிக்கைகள் வாட்ஸ்அப் மற்றும் ஃபேஸ்புக் தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

    வைரல் தகவல்களில் வறுத்த மற்றும் காரமான உணவு வகைகளை உட்கொள்ள வேண்டாம், தொண்டை வறட்சியாக விடக் கூடாது, எப்போதும் பாதுகாப்பு முகமூடி அணிந்திருக்க வேண்டும். தொண்டை வறட்சி ஏற்பட்டால் பத்து நிமிடங்களில் வைரஸ் உடல் முழுக்க பரவி பாதிப்பை ஏற்படுத்திவிடும் என்பது போன்ற விவரங்கள் இடம்பெற்று இருக்கின்றன. 

    வைரல் தகவல்களை ஆய்வு செய்ததில், மத்திய சுகாதாரத் துறை வெளியிட்ட தகவல்களும் வைரல் விவரங்களும் முற்றிலும் முரணாக இருப்பது உறுதியாகி இருக்கிறது. மேலும் மத்திய அமைச்சகம் வெளியிட்ட தகவல்களில் சீனா செல்வோருக்கு பயண அறிவுரைகளை மட்டுமே வெளியிட்டு இருக்கிறது. முன்னதாக ஜனவரி 17-ம் தேதி வெளியிட்டு பின் ஜனவரி 25-ம் தேதி அதனை மாற்றியது.

    கொரோனா வைரஸ் வைரல் பதிவு ஸ்கிரீன்ஷாட்

    பயண அறிவுரைகளில் சீனாவில் இருந்து திரும்பும் பயணிகளுக்கு இருமல் மற்றும் காய்ச்சல் இருந்தால் 011-23978046 என்ற உதவி எண்ணிற்கு தொடர்பு கொள்ள வேண்டும் என தெரிவித்து இருக்கிறது. 

    இத்துடன் உடல் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ள சிறப்பு வழிமுறைகளையும் மத்திய அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதில் அடிக்கடி கைகளை கழுவுதல், முகமூடி அணிந்திருத்தல், உயிருடன் இருக்கும் விலங்குகளுடன் தொடர்பை தவிர்த்தல், சமைக்கப்படாத இறைச்சி வகைகளை உட்கொள்ள வேண்டாம் என்பது போன்ற தகவல்கள் இடம்பெற்று இருக்கிறது. 

    எனினும், வறுத்த மற்றும் காரமான உணவு வகைகளை உட்கொள்ள வேண்டாம், தொண்டை வறட்சியாக விடக் கூடாது என்பது போன்ற தகவல்கள் எதுவும் சுகாதார துறை வெளியிட்ட அறிக்கையில் இடம்பெற்றிருக்கவில்லை. அந்தவகையில் வைரல் பதிவுகளில் உள்ள தகவல்கள் உண்மையில்லை என உறுதியாகிவிட்டது.

    போலி செய்திகளை பரப்பாதீர்கள். வலைத்தளங்களில் வரும் தகவல்களின் உண்மைத்தன்மை தெரியாமல் அவற்றை பரப்ப வேண்டாம். சமயங்களில் போலி செய்திகளால் உயிரிழப்பு உள்பட பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன.

    Next Story
    ×