search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உச்ச நீதிமன்றம்
    X
    உச்ச நீதிமன்றம்

    நீட் தேர்வு கட்டாயம் என்ற நிலையை மாற்ற முடியாது- சிஎம்சி தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் கருத்து

    நீட் தேர்வு கட்டாயம் என்ற நிலையை மாற்ற முடியாது என்றும், ஒரு கல்லூரிக்கு மட்டும் விலக்கு அளிக்க முடியாது என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
    புதுடெல்லி:

    மருத்துவப் படிப்புகளுக்கு நீட் தேர்வை கட்டாயமாக்கும் சட்டத்திருத்தத்தை எதிர்த்து வேலூர் சிஎம்சி மருத்துவக் கல்லூரி சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. நீதிபதிகள் அருண் மிஷ்ரா, இந்திரா பானர்ஜி ஆகியோர் கொண்ட அமர்வில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. 

    அப்போது மருத்துவ படிப்புகளுக்கு நீட் தேர்வு கட்டாயம் என்பது ஏற்கனவே முடிவு செய்துவிட்ட விஷயம் என்றும், அதை மாற்ற முடியாது என்றும் நீதிபதிகள் திட்டவட்டமாக தெரிவித்தனர்.

    ‘நீட் தேர்வு வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு சரியாக உள்ளது. நீட் தேர்வு தொடர்ந்து நடைபெறும்; அதில் பின்வாங்கும் பேச்சுக்கே இடமில்லை. நீட் தேர்வில் இருந்து ஒரு தனியார் கல்லூரிக்கு மட்டும் விலக்கு அளிக்க முடியுமா? நீட் போன்ற தேர்வு முறைகளை மார்றறியமைப்பது நீதிமன்றங்களின் வேலையா?’ என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
    Next Story
    ×