search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிவ போஜன் திட்டம்
    X
    சிவ போஜன் திட்டம்

    மகாராஷ்டிரத்தில் 10 ரூபாய்க்கு மதிய உணவு திட்டம் தொடக்கம்

    மகாராஷ்டிரத்தில் 10 ரூபாய்க்கு மதிய உணவு திட்டம் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் 2 சப்பாத்தி, சாதம், காய்கறி மற்றும் பருப்பு ஆகியவை ரூ.10-க்கு வழங்கப்படும்.
    மும்பை:

    மகாராஷ்டிரத்தில் 10 ரூபாய்க்கு மதிய உணவு வழங்கும் திட்டம் அமல்படுத்தப்படும் என கடந்த சட்டசபை தேர்தலின்போது சிவசேனா கட்சி வாக்குறுதி அளித்து இருந்தது. தற்போது அங்கு கூட்டணி ஆட்சி அமைத்திருக்கும் அந்த கட்சி தனது கனவு திட்டமான ‘சிவ போஜன்’ எனப்படும் 10 ரூபாய் மதிய உணவு (தாலி) திட்டத்தை நேற்று அமல்படுத்தியது.

    குடியரசு தினத்தையொட்டி மாநிலம் முழுவதும் இந்த திட்டம் தொடங்கப்பட்டது. ஒவ்வொரு மாவட்டத்திலும் மாநில மந்திரிகள் இந்த திட்டத்தை தொடங்கி வைத்தனர். இதற்காக மாவட்ட தலைநகரங்களில் பிரத்யேக உணவகம் திறக்கப்பட்டு உள்ளது.

    இந்த திட்டத்தின் கீழ் 2 சப்பாத்தி, சாதம், காய்கறி மற்றும் பருப்பு ஆகியவை ரூ.10-க்கு வழங்கப்படும். இந்த சிறப்பு உணவகங்களில் நண்பகல் 12 முதல் பிற்பகல் 2 மணி வரை இந்த மலிவு விலை மதிய உணவு கிடைக்கும்.

    இந்த உணவகங்களில் நாள்தோறும் குறைந்தபட்சம் 500 பேருக்காவது உணவு வழங்க வேண்டும் என அரசு உத்தரவிட்டு உள்ளது. இந்த திட்டத்துக்கு மக்களிடையே பெரும் வரவேற்பு காணப்படுகிறது.
    Next Story
    ×