என் மலர்

  செய்திகள்

  சித்தராமையா
  X
  சித்தராமையா

  அரசியல் சாசனம் மீது பாஜகவினருக்கு நம்பிக்கை இல்லை: சித்தராமையா

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பா.ஜனதாவினருக்கு அரசியல் சாசனம் மீது நம்பிக்கை இல்லை. அதனால் இந்த அரசியல் சாசனத்தை மாற்றுவதாக கூறுகிறார்கள் என்று கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா கூறியுள்ளார்.
  பெங்களூரு :

  கர்நாடக காங்கிரஸ் கட்சி சார்பில் குடியரசு தின விழா பெங்களூரு குயின்ஸ் ரோட்டில் உள்ள அக்கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா கலந்து கொண்டார். அதன் பிறகு அவர் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

  இடைத்தேர்தலில் தோல்வி அடைந்தவர்களுக்கு மந்திரி பதவி கிடையாது என்று முதல்-மந்திரி எடியூரப்பா கூறியுள்ளார். காங்கிரசுக்கு துரோகம் செய்தவர்களுக்கு இது தக்க பாடமாக அமையும். நம்பிக்கை துரோகம் செய்பவர்களுக்கு இத்தகைய தண்டனை கிடைக்க வேண்டும்.

  கர்நாடக காங்கிரசுக்கு புதிய தலைவர் நியமனம் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் பதவி விஷயங்களில் கட்சி மேலிடம் சரியான முடிவு எடுக்கும். நமது தேசத்திற்காக ஏராளமானவர்கள் தியாகம் செய்துள்ளனர். அவர்களின் தியாகத்தால் நமது நாட்டுக்கு சுதந்திரம் கிடைத்துள்ளது. நமது அரசியல் சாசனம் மிக சிறப்பானது.

  பா.ஜனதாவினருக்கு அரசியல் சாசனம் மீது நம்பிக்கை இல்லை. அதனால் இந்த அரசியல் சாசனத்தை மாற்றுவதாக கூறுகிறார்கள். ஆனால் நாங்கள் அம்பேத்கர் உருவாக்கிய இந்த அரசியல் சாசனத்தை பாதுகாக்கும் பணியை செய்வோம். பா.ஜனதா ஆட்சிக்கு வந்த பிறகு நாடு ஆபத்தில் உள்ளது.

  இவ்வாறு சித்தராமையா கூறினார்.
  Next Story
  ×