search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி
    X
    மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி

    பிரதமர் மோடியின் மன் கி பாத் நிகழ்ச்சி இன்று மாலை ஒலிபரப்பாகிறது

    பிரதமர் மோடியின் மன் கி பாத் நிகழ்ச்சி இன்று மாலை 6 மணிக்கு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
    புதுடெல்லி:

    கடந்த 2014-ம் ஆண்டு பிரதமராக பொறுப்பேற்ற நரேந்திர மோடி, மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் மன் கி பாத் என்ற நிகழ்ச்சியின் மூலம் நாட்டு மக்களுடன் உரையாற்றி வருகிறார்.
     
    இந்த வானொலி உரையின்போது மத்திய அரசு செயல்படுத்தி வரும் சிறப்பு திட்டங்களால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள நன்மைகள் குறித்து பேசி வருகிறார். ஒவ்வொரு மாதமும் இறுதி ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 11 மணிக்கு மன் கி பாத் நிகழ்ச்சி நடைஒபெறுவது வழக்கம்.

    இந்நிலையில், புத்தாண்டின் முதல் மன் கி பாத் நிகழ்ச்சி இன்று நடைபெற உள்ளது. ஆனால், இந்த நிகழ்ச்சி காலை 11 மணிக்கு பதிலாக  மாலை 6 மணிக்கு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    குடியரசு தினம் என்பதால் அன்றைய தினத்தில் மாலையில் மன் கி பாத் நிகழ்ச்சி ஒலிபரப்பாகும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
    Next Story
    ×