search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மத்திய சுகாதார மந்திரி ஹர்ஷ்வர்த்தன்
    X
    மத்திய சுகாதார மந்திரி ஹர்ஷ்வர்த்தன்

    கொரோனா வைரஸ் தாக்குதல்? சீனாவில் இருந்து கேரளா வந்த 7 பேர் தீவிர கண்காணிப்பு

    சீனாவில் இருந்து கேரளாவுக்கு வந்த மேலும் 7 பேருக்கு கொரோனா வைரஸ் தாக்குதல் இருக்கலாம் என்ற சந்தேகத்தில் அவர்கள் தீவிர கண்காணிப்பில் உள்ளதாக மத்திய சுகாதார மந்திரி ஹர்ஷ்வர்த்தன் தெரிவித்தார்.
    புதுடெல்லி:

    இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்குதல் குறித்து மத்திய சுகாதார மந்திரி ஹர்ஷ்வர்த்தனிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

    சீனாவில் இருந்து கேரளாவுக்கு வந்த மேலும் 7 பேருக்கு கொரோனா வைரஸ் தாக்குதல் இருக்கலாம் என்ற சந்தேகத்தில் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தீவிர கண்காணிப்பில் உள்ளனர். அவர்களது ரத்தம் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்காக புனேயில் உள்ள ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஏற்கனவே அங்கு சோதிக்கப்பட்ட 4 பேருக்கு வைரஸ் தாக்குதல் இல்லை என தெரியவந்தது. இதுவரை இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்குதல் யாருக்கும் இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கேரளாவில் 7 பேர், மும்பையில் 2 பேர், பெங்களூரு, ஐதராபாத்தில் தலா ஒருவர் என சீனாவில் இருந்து வந்த 11 பேர் சந்தேகத்தின் அடிப்படையில் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
    Next Story
    ×