search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராம்நாத் கோவிந்த்
    X
    ராம்நாத் கோவிந்த்

    இஸ்ரோவின் சாதனைகளால் இந்தியா பெருமிதம் கொள்கிறது - ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்

    குடியரசு தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களிடம் உரையாற்றிய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், இஸ்ரோவின் சாதனைகளால் இந்தியா பெருமிதம் கொள்கிறது என தெரிவித்தார்.
    புதுடெல்லி:

    குடியரசு தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நாட்டு மக்களிடம் இன்று இரவு உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:

    71-வது குடியரசு தினத்தை எதிர்கொள்ளும் நமக்கு உரிமை, கடமை இருக்கிறது. மத்திய அரசு கொண்டு வந்த புதிய திட்டங்களால் 14 கோடி விவசாயிகள் ஆண்டுதோறும் ரூ.6 ஆயிரம் வருமானம் பெறும் உரிமையை பெற்றுள்ளனர்.

    கல்வி மற்றும் மருத்துவத் துறைகளில் நாடு முன்னேற்றம் கண்டுவருகிறது. சமூக நலம் சார்ந்த திட்டங்களை மத்திய அரசு தொடர்ந்து நிறைவேற்றி வருகிறது. கல்வி வளர்ச்சி அபரிமிதமாக வளர்ந்துள்ளது. ஒவ்வொரு குழந்தையும் கல்வி கற்கும் உரிமையை பெற்றுள்ளது.

    இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் சாதனைகள் குறித்து நாடு பெருமிதம் கொள்கிறது. மிஷன் ககன்யானில் இஸ்ரோ முன்னேறி வருகிறது, இந்தியா அதை உற்சாகத்துடன் எதிர்பார்க்கிறது.

    டோக்கியோவில் நடக்கும் ஒலிம்பிக்கில் தடகள வீரர்கள் சாதனை படைப்பார்கள் என நம்புகிறேன். நீர் சேமிப்புக்கு அரசு கவனம் செலுத்தி வருகிறது.

    தூய்மை இந்தியா பொதுமக்களின் பங்களிப்பால் மிகக் குறுகிய காலத்தில் பெரும் வெற்றியை பெற்றிருக்கிறது. பிரதமரின் உஜ்வாலா யோஜனா திட்டம் பெருமைப்பட வேண்டியஒன்று. இது ஏழைகளின் வாழ்க்கையில் ஒளியை ஏற்றியுள்ளது. இதில் 8 கோடி பயனாளிகள் சேர்க்கப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×