search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    குஜராத்தில் சட்டவிரோதமாக குடியேறியிருந்த 11 வங்காளதேசத்தினர் கைது

    குஜராத்தில் உரிய அனுமதி மற்றும் ஆவணங்கள் இல்லாமல் சட்டவிரோதமாக குடியேறியிருந்த 11 வங்காளதேசத்தினரை போலீசார் கைது செய்தனர்.
    அகமதாபாத்:

    அசாம் மாநிலத்தில் சட்டவிரோதமாக குடியேறிய வங்கதேசத்தவர்களை கண்டறியும் வகையில் தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆர்சி) தயாரிக்கப்பட்டது. 

    அசாமை போன்றே நாடு முழுவதும் தேசிய குடிமக்கள் பதிவேடுக்கான கணக்கெடுப்பு நடத்தப்பட்டு இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக ஊடுருவிய ஒவ்வொருவரும் அடையாளம் காணப்பட்டு வெளியேற்றப்படுவார்கள் என மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தெரிவித்துள்ளார்.

    இதற்கிடையில், நாட்டில் அமலுக்கு வந்துள்ள குடியுரிமை திருத்தச்சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு போன்றவற்றால் இந்தியாவில் சட்ட விரோதமாக குடியேறியவர்கள் பலர் தொடர்ந்து கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றனர்.

    இந்நிலையில், குஜராத் மாநிலம் அகமதாபாத் மாவட்டம் இஷான்பூரில் உள்ள சந்டோலா ஏரிக்கரையில் இன்று சிறப்பு போலீசார் அதிரடி ஆய்வு நடத்தினர். 

    அந்த ஆய்வில் ஏரிக்கரையோரம் உரிய ஆவணங்கள் இல்லாமல் சட்டவிரோதமாக குடியேறியிருந்த 11 வங்காளதேச நாட்டினர் கண்டுபிடிக்கப்பட்டனர். அவர்கள் அனைவரும் அப்பகுதியில் கட்டிட வேலை உள்ளிட்ட பல்வேறு வேலைகளில் தொழிலாளர்களாக செயல்பட்டு வந்துள்ளனர். 

    இதையடுத்து, 11 வங்காளதேசத்தினரையும் கைதுசெய்த போலீசார் அவர்களை சொந்த நாட்டிற்கு திருப்பி அனுப்ப தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.
    Next Story
    ×