search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாஜக வேட்பாளர் கபில் மிஷ்ரா
    X
    பாஜக வேட்பாளர் கபில் மிஷ்ரா

    பாஜக வேட்பாளர் கபில் மிஷ்ரா தேர்தல் பிரசாரம் செய்ய 48 மணி நேரம் தடை - தேர்தல் ஆணையம்

    டெல்லி சட்டசபைத் தேர்தலை இந்தியா-பாகிஸ்தான் போட்டியுடன் ஒப்பிட்ட பாஜக வேட்பாளர் கபில் மிஷ்ரா இன்று மாலை 5 மணி முதல் 48 மணி நேரத்துக்கு தேர்தல் பிரசாரம் செய்ய தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.
    புதுடெல்லி:

    தலைநகர் டெல்லியில் பிப்ரவரி 8-ம் தேதி சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் பணிகளில் அரசியல் கட்சிகள் சுறுசுறுப்பாக ஈடுபட்டுள்ளன. மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜக, டெல்லியில் ஆட்சியைப் பிடிக்க தீவிரமாக களப்பணியாற்றி வருகிறது.

    ஆம் ஆத்மி கட்சியில் இருந்து விலகி பாஜகவில் சேர்ந்தவர் கபில் மிஷ்ரா. இவர்டெல்லி மாடல் டவுன் தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிடுகிறார்.

    இதற்கிடையே, கபில் மிஷ்ரா டெல்லி தேர்தல் தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு கருத்தை பதிவிட்டிருந்தார். அந்த டுவிட்டர் பதிவில், பிப்ரவரி 8-ம் தேதி டெல்லி வீதிகளில் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே போட்டி நடக்கும் என பதிவிட்டிருந்தார்.

    இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியுடன் டெல்லி தேர்தலை ஒப்பிட்டு அவர் கருத்து பதிவிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுகுறித்து அறிக்கை அளிக்கும்படி டெல்லி தலைமை தேர்தல் அதிகாரிக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. 

    இந்நிலையில், டெல்லி சட்டசபைத் தேர்தலை இந்தியா-பாகிஸ்தான் போட்டியுடன் ஒப்பிட்ட பா.ஜ.க. வேட்பாளர் கபில் மிஷ்ராவுக்கு 48 மணி நேரம் பிரசாரம் செய்ய தடை விதித்தது.

    இதுதொடர்பாக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பாஜக வேட்பாளர் கபில் மிஷ்ரா இன்று மாலை 5 மணி முதல் 48 மணி நேரத்துக்கு தேர்தல் பிரசாரம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது,
    Next Story
    ×