search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சஞ்சய் ராவத்
    X
    சஞ்சய் ராவத்

    தேவேந்திர பட்னாவிஸ் ஆட்சியில் எனது போன் ஒட்டு கேட்கப்பட்டது: சஞ்சய் ராவத்

    தேவேந்திர பட்னாவிஸ் ஆட்சியில் எனது போன் ஒட்டு கேட்கப்பட்டதாக பா.ஜனதா தலைவர் ஒருவரே என்னிடம் கூறினார் என சஞ்சய் ராவத் எம்.பி. கூறியுள்ளார்.
    மும்பை :

    மாநில உள்துறை மந்திரி அனில் தேஷ்முக் முந்தைய பா.ஜனதா ஆட்சியில் எதிர்க்கட்சி தலைவர்களின் போன்கள் ஒட்டுகேட்கப்பட்டதாக குற்றம் சாட்டினார். குறிப்பாக சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் சேர்ந்து மகாவிகாஸ் கூட்டணி உருவான போது, அந்த கட்சி தலைவர்களின் போன்கள் ஒட்டுகேட்கப்பட்டதாக கூறிய அவர், இது குறித்து விசாரணை நடத்தப்படும், என்றார்.

    இந்தநிலையில் இது குறித்து சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் கூறுகையில், ‘‘தேவேந்திர பட்னாவிஸ் ஆட்சியில் எனது போன் ஒட்டு கேட்கப்பட்டதாக அப்போதே பா.ஜனதா தலைவர் ஒருவர் என்னிடம் கூறினார். யாராவது எனது பேச்சை கேட்க விரும்பினால் அதை நான் வரவேற்கிறேன் என அவரிடம் கூறினேன். நான் பால்தாக்கரேவின் சீடன். நான் எதை செய்தாலும், அதை வெளிப்படையாகவே செய்வேன்’’ என்றார்.

    தேவேந்திர பட்னாவிஸ்

    மேலும் டெல்லியில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரின் வீட்டுக்கு போடப்பட்டு இருந்த பாதுகாப்பு திரும்ப பெறப்பட்டது குறித்து அவரிடம் கேட்டபோது, ‘‘மராட்டியத்தில் சிவசேனா தலைமையில் ஆட்சி அமைய முக்கிய காரணமாக இருந்தவர் சரத்பவார். அதன் காரணமாக அவரது வீட்டுக்கு அளிக்கப்பட்ட பாதுகாப்பு திரும்ப பெறப்பட்டு இருக்கலாம்.

    சில ஆண்டுகளுக்கு முன் அவர் டெல்லியில் தாக்கப்பட்டார். சமீபத்தில் சோனியா காந்தியின் குடும்பத்தினருக்கு அளிக்கப்பட்ட எஸ்.பி.ஜி. பாதுகாப்பு கூட திரும்ப பெறப்பட்டுள்ளது’’ என கூறினார்.
    Next Story
    ×