search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வைரஸ் அறிகுறி உள்ளதா என பரிசோதனை
    X
    வைரஸ் அறிகுறி உள்ளதா என பரிசோதனை

    இந்தியாவிலும் பரவுகிறதா கொரோனா வைரஸ்? 3 பேர் தீவிர கண்காணிப்பு பிரிவில் அனுமதி

    வெளிநாடுகளில் இருந்து ஹைதராபாத் மற்றும் மும்பைக்கு வந்த 3 பயணிகளுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளதால் அவர்கள் தீவிர கண்காணிப்பில் உள்ளனர்.
    புதுடெல்லி:   

    சீனாவில் உள்ள ஹூபேய் மாகாணத்தில் முதன்முதலில் பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ் உலக நாடுகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்து வருகிறது. வவ்வாலில் இருந்து இந்த வைரஸ் பரவியுள்ளது. 

    இந்த வைரசுக்கும் வவ்வாலுக்கும் நேரடி தொடர்ப்பு இல்லை என்றாலும் அவற்றை உணவாக சாப்பிடும் கட்டுவிரியன் பாம்புகள் மூலமாக இந்த வைரஸ் பரவியுள்ளதாக ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.

    கட்டுவிரியன் பாம்புகளில் விஷத்தன்மை குறைவாக உள்ளதால் அவற்றை சீனர்கள் உணவாகவும், சூப் வைத்தும் சாப்பிடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். 

    அதிலும் உயிருடன் உள்ள பாம்புகளை வாங்கி சென்று சமைத்து சாப்பிடுகின்றனர். ஆகையால், வவ்வாலில் இருந்து கட்டுவிரியன் பாம்புகள் மூலமாக  சீனா மக்களிடம் கொரோனா வைரஸ் வேகமாக பரவிவருகிறது.

    பாதிக்கப்பட்ட நபர்களுக்கு சுவாசக்கோளாறை ஏற்படுத்தி உயிரிழப்பை உண்டாக்கும் இந்த வைரசால் சீனாவில் இதுவரை 25 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 830 பேர் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது உறுதிபடுத்தப்பட்டுள்ளது. 

    இந்த வைரஸ் சீனாவில் மட்டுமல்லாமல் வெளிநாடுகளுக்கும் பரவும் அபாயம் உள்ளதால் பல்வேறு நாடுகளும் சீனாவில் இருந்து வரும் பயணிகளை சோதனைகளுக்கு உட்படுத்தி அவர்களுக்கு வைரஸ் பாதிப்பு உள்ளதா என தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

    இந்தியாவிலும் விமானம் மூலம் சீனாவிலும் இருந்து வரும் பயணிகளை தீவிர பரிசோதனைகளுக்கு பின்னரே விமானநிலையத்தில் இருந்து வெளியே செல்ல அனுமதிக்கின்றனர்.

    இந்நிலையில், கொரோனா வைரஸ் பாதிப்பு அறிகுறிகளுடன் மும்பையில் 2 பேரும், ஹைதராபாத்தில் ஒரு நபரும் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. 

    வைரஸ் பரிசோதனை கருவி

    இது குறித்து அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில், கொரோனா வைரஸ் குறித்து தகவல் வெளியானது முதல் இன்று வரை சீனாவில் இருந்து இந்தியா வந்த 96 விமானங்களில் இருந்த மொத்தம் 20,844 பயணிகளுக்கும் வைரஸ் பாதிப்பு இருக்கிறதா? என்ற ஆய்வு நடத்தப்பட்டது. 

    இன்று மட்டும் 19 விமானங்களில் இருந்த 4,082 பயணிகள் பரிசோதனைகளுக்கு உட்பத்தப்பட்டனர். அவர்களில் மும்பையை சேர்ந்த 2 பேருக்கும், ஹைதராபாத்தை சேர்ந்த ஒரு நபர்க்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. 

    ஆகையால் அவர்கள் தீவிர கண்காணிப்பு பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகம் தெரிவித்துள்ளது.
    Next Story
    ×