search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டெல்லி ஐகோர்ட்
    X
    டெல்லி ஐகோர்ட்

    நிர்பயா குற்றவாளிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்ற உத்தரவை விதித்த நீதிபதி இடமாற்றம்

    நிர்பயா வழக்கு குற்றவாளிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்ற உத்தரவை பிறப்பித்த டெல்லி கீழமை நீதிமன்ற நீதிபதி சதீஷ்குமார் அரோரா உச்ச நீதிமன்றத்தின் கூடுதல் பதிவாளராக இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளார்.
    புதுடெல்லி:

    தலைநகர் டெல்லியில் மருத்துவ மாணவி கற்பழித்து கொடூர முறையில் கொலை செய்யப்பட்ட நிர்பயா வழக்கில் முகேஷ் குமார் சிங் (32), பவன் குப்தா (25), வினய் சர்மா (26), அக்‌ஷய் குமார் சிங் (31) ஆகிய 4 குற்றவாளிகளுக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. விசாரணை கோர்ட்டு விதித்த இந்த  தண்டனையை டெல்லி ஐகோர்ட்டும், சுப்ரீம் கோர்ட்டும் உறுதி செய்தன.
     
    குற்றவாளிகள் 4 பேரையும் பிப்ரவரி 1-ம் தேதி காலை 6 மணிக்கு திகார் சிறையில் தூக்கில் போட வேண்டும் என விசாரணை கோர்ட்டு மரண வாரண்டு பிறப்பித்தது. அங்கு நீதிபதியாக இருந்த சதீஷ்குமார் அரோரா இந்த தீர்ப்பை வழங்கினார். இதைத் தொடர்ந்து அவர்கள் 4 பேரையும் தூக்கில் போடுவதற்கு ஏற்பாடுகள் நடைபெற்று வந்தன.

    இந்நிலையில், நிர்பயா வழக்கில் குற்றவாளிகள் 4 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்ற உத்தரவை பிறப்பித்த டெல்லி கீழமை நீதிமன்ற நீதிபதி சதீஷ்குமார் அரோரா உச்ச நீதிமன்றத்தின் கூடுதல் பதிவாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளார் என டெல்லி நீதிமன்ற பதிவாளர் தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×