search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரூபா கங்குலி
    X
    ரூபா கங்குலி

    உலகின் மிகமுக்கியமான மனித உரிமைகள் சட்டம் சிஏஏ - ரூபா கங்குலி

    குடியுரிமை திருத்தச் சட்டம் உலகின் மிக முக்கியமான மனித உரிமைகள் சட்டமாக கருதப்பட வேண்டும் என பாஜக எம்பி ரூபா கங்குலி தெரிவித்துள்ளார்.
    புவனேஸ்வர்:

    குடியுரிமை திருத்த சட்டத்தைப் பற்றியும் அதை எதிர்த்து நாடு முழுவதும் நடைபெற்று வரும் போராட்டங்கள் குறித்தும் நாம் அறிந்ததே. அதே நேரத்தில் இந்த சட்டத்திற்கு ஆதரவாகவும், விளக்கம் அளிக்கும் வகையிலும் ஆளும் கட்சியான பாஜக, பேரணிகள் நடத்தி வருகின்றன. போராட்டங்கள் நடைபெற்றாலும் இந்த சட்டத்தை திரும்ப பெறப்போவதில்லை என மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், குடியுரிமை திருத்தச் சட்டம் உலகின் மிக முக்கியமான மனித உரிமைகள் சட்டமாக கருதப்பட வேண்டும் என பாஜக பாராளுமன்ற உறுப்பினர் (ராஜ்ய சபா) ரூபா கங்குலி தெரிவித்துள்ளார்.

    நடிகையாக இருந்து பின்னர் அரசியலில் களம் கண்டவர் ரூபா கங்குலி. ராஜ்ய சபா உறுப்பினராக உள்ள இவர், கிழக்கு பாகிஸ்தானில் இருந்து, ஒடிசாவின் மால்கங்கிரி மற்றும் நாபரங்பூர் மாவட்டங்களில் தஞ்சம் புகுந்துள்ள அகதிகளை சந்தித்தார்.

    அங்கு நடைபெற்ற நிகழ்வில் பேசிய ரூபா, ‘தங்களது அரசியல் லாபத்திற்காக எதிர்க்கட்சிகள் குடியுரிமை திருத்த சட்டத்தைப் பற்றி பொய்யை பரப்பி வருகின்றன. இந்திய குடிமக்களுக்கு, சிஏஏ எந்த வகையிலும் மோசமான தாக்கத்தை ஏற்படுத்தாது.

    இந்த விவகாரத்தில், கூச்சல்களும் கூக்குரல்களும் இருந்தபோதிலும், சிஏஏ மனிதநேயத்தை அடையாளப்படுத்துகிறது என்பதே உண்மை. இது உலகின் மிக முக்கியமான மனித உரிமைச் சட்டம் என்று கூறப்படவேண்டும். சித்திரவதை செய்யப்பட்டு துன்புறுத்தப்பட்ட பின்னர் இங்கு வரும் மக்களுக்கு குடியுரிமை வழங்குவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது’ என்றார். 
    Next Story
    ×