search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜி.எஸ்.டி.
    X
    ஜி.எஸ்.டி.

    வரி செலுத்துவோர் மூன்றாக பிரிப்பு - ஜி.எஸ்.டி. கணக்கு தாக்கல் செய்ய 3 கட்ட தேதி அறிவிப்பு

    வர்த்தகர்கள், தொழில் அதிபர்கள் ஜி.எஸ்.டி. கணக்கு தாக்கல் செலுத்துவோரை மூன்றாக பிரித்து கணக்கு தாக்கல் செய்வதற்கு 3 இறுதி நாட்களை நிதித்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
    புதுடெல்லி:

    வர்த்தகர்கள், தொழில் அதிபர்கள் ஜி.எஸ்.டி. கணக்கு தாக்கல் செய்ய தற்போது ஒவ்வொரு மாதம் 20-ந் தேதி கடைசி நாளாக இருக்கிறது. பெரும்பாலானோர் இறுதி நாளில் கணக்கு தாக்கல் செய்வதால் நெட்வொர்க் மற்றும் தொழில்நுட்ப கோளாறுகள் ஏற்பட்டு வர்த்தகர்கள் பாதிக்கப்பட்டனர். எனவே வரி செலுத்துவோரை மூன்றாக பிரித்து கணக்கு தாக்கல் செய்வதற்கு 3 இறுதி நாட்களை நிதித்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

    அதன்படி ஆண்டுக்கு ரூ.5 கோடி மற்றும் அதற்கு மேல் வர்த்தகம் செய்வோர் (8 லட்சம் பேர்) 20-ந் தேதிக்குள்ளும், ரூ.5 கோடிக்கு குறைவாக வர்த்தகம் செய்வோரில் தமிழ்நாடு, புதுச்சேரி, மராட்டியம், கர்நாடகம் உள்ளிட்ட 15 மாநிலங்களை சேர்ந்தவர்கள் (49 லட்சம் பேர்) 22-ந் தேதிக்குள்ளும், எஞ்சிய 22 மாநிலங்களை சேர்ந்தவர்கள் (46 லட்சம் பேர்) 24-ந் தேதிக்குள்ளும் கணக்கு தாக்கல் செய்ய வேண்டும்.
    Next Story
    ×