search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வயோம் மித்ரா
    X
    வயோம் மித்ரா

    விண்வெளிக்கு மனித ரோபோ அனுப்பும் இஸ்ரோ

    விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்திற்கு முன்னோடியாக மனித உருவிலான ரோபோவை முதலில் அனுப்ப இஸ்ரோ திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
    பெங்களூரு:

    விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தும் முயற்சியில் இஸ்ரோ ஈடுபட்டுள்ளது. இந்த திட்டத்தின்கீழ் வரும் 2022ம் ஆண்டு 3 பேர் அடங்கிய குழு விண்வெளிக்கு செல்ல உள்ளது. 

    இந்நிலையில், இந்த திட்டத்திற்கு முன்னோடியாக மனித உருவிலான பெண் ரோபோவை இந்த ஆண்டு இறுதிக்குள் விண்வெளிக்கு அனுப்ப இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.

    ‘வயோம் மித்ரா’ எனும் பெண் உருவம் உடைய ரோபோ இதற்காக உருவாக்கப்பட்டுள்ளது. மனிதர்கள் செய்யும் பல வேலைகளை செய்யும் திறமையுடைய இந்த ரோபோ இரு மொழிகளில் சரளமாக பேசும் திறனுடையது.

    விண்வெளிக்கு அனுப்புவதற்கு மனித உருவ ரோபோ தயாராக உள்ளது. இது விண்வெளி ஆராய்ச்சி துறையில் நமது திறமையை வெளிப்படுத்துவது மட்டுமல்லாமல் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பி பாதுகாப்பாக திருப்பி கொண்டுவரவும் உதவுகிறது என இஸ்ரோ தலைவர் சிவன் முன்னதாக கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. 
    Next Story
    ×