search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சோனியா காந்தி
    X
    சோனியா காந்தி

    பஞ்சாப் காங்கிரஸ் கமிட்டி அடியோடு கலைப்பு- சோனியா காந்தி நடவடிக்கை

    பஞ்சாப் மாநில காங்கிரஸ் கமிட்டியை கூண்டோடு கலைத்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி நடவடிக்கை எடுத்துள்ளார்.
    சண்டிகார்:

    பஞ்சாப் மாநிலத்தில் அம்ரீந்தர் சிங் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. அந்த மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியில் பல்வேறு கோஷ்டி பூசல்கள் இருந்தன. இதை தொடர்ந்து முதல்-மந்திரி அம்ரீந்தர்சிங் டெல்லி சென்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்தித்து முறையிட்டார்.

    இந்த நிலையில் பஞ்சாப் மாநில காங்கிரஸ் கமிட்டியை கூண்டோடு கலைத்து சோனியா காந்தி நடவடிக்கை எடுத்துள்ளார். மாநில தலைவர் சுனில் ஜாகர் மட்டுமே பதவியில் நீடிக்கிறார். அனைத்து மாவட்ட கமிட்டிகளும் கலைக்கப்பட்டு உள்ளது.

    இதுகுறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் கூறும்போது, பஞ்சாப் மாநில காங்கிரசின் செயற்குழு மற்றும் மாவட்ட செயற்குழுவை சோனியா காந்தி கூண்டோடு கலைத்துள்ளார் என்றார்.

    ஆட்சிக்கும், கட்சிக்கும், இடையில் சிறந்த ஒருங்கிணைப்பை உறுதி செய்வதற்காக 11 பேர் கொண்ட குழுவை சோனியா காந்தி நியமித்துள்ளார்.

    இந்த குழுவுக்கு பஞ்சாப் மாநில மேலிட பொறுப்பாளர் ஆஷாகுமாரி தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    முதல் மந்திரி அம்ரீந்தர் சிங், மாநில காங்கிரஸ் தலைவர் சுனில் ஜாகர் ஆகியோரும் இந்த குழுவில் உறுப்பினராக உள்ளனர். இது தவிர அகில இந்திய பொதுச் செயலாளர் அம்பிகா சோனியும் குழுவில் உள்ளார்.

    முதல் மந்திரி அம்ரீந்தர் சிங்குக்கும், மேல்சபை எம்.பி. பிரதாப்பஜ்வாக்கும் இடையே மோதல் ஏற்பட்டு கோஷ்டி பூசல் உருவானது. இதன் காரணமாக பஞ்சாப் காங்கிரஸ் கூண்டோடு கலைக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×