search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைதான விபசார கும்பல்
    X
    கைதான விபசார கும்பல்

    சொகுசு பங்களாவில் விபசாரம்- பெண் உள்பட 8 பேர் கைது

    திருவனந்தபுரம் அருகே சொகுசு பங்களாவில் விபசாரம் நடத்திய பெண் உள்பட 8 பேரை போலீசார் கைது செய்தனர். தப்பி ஓடிய விபசார கும்பலின் முக்கிய குற்றவாளியை போலீசார் தேடி வருகின்றனர்.
    திருவனந்தபுரம்:

    திருவனந்தபுரம் அருகே வர்க்கலை கரைகுன்னு பகுதியில் ஒரு சொகுசு பங்களா உள்ளது. இந்த பங்களாவுக்கு அடிக்கடி கார் உள்பட வாகனங்களில் ஆண்கள் வந்துச் சென்றனர். இது அக்கம் பக்கத்தினருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியதால் அவர்கள் வர்க்கலை போலீசில் புகார் செய்தனர்.

    இதைத் தொடர்ந்து போலீசாரும் அந்த பங்களாவை ரகசியமாக கண்காணித்து வந்தனர். அப்போது அங்கு விபசாரம் நடப்பது போலீசாருக்கு தெரிய வந்தது.

    உடனே அந்த வீட்டில் போலீசார் அதிரடியாக சோதனை நடத்தினார்கள். அப்போது அந்த வீட்டில் அழகிகள் மூலம் விபசாரம் நடைபெற்றது உறுதியானது.

    அந்த வீட்டில் இருந்த பிந்து (வயது45) என்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர். அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

    பிந்து, அந்த பங்களாவை வாடகைக்கு எடுத்து அழகிகளை வைத்து விபசாரம் செய்து வந்துள்ளார். செல்போன் மூலம் பிந்து வாடிக்கையாளர்களை தொடர்பு கொண்டு தனது பங்களாவுக்கு அவர்களை வரவழைப்பார். பின்னர் அழகிகளுடன் அவர்களை உல்லாசமாக இருக்க வைத்து அதற்கு பணமும் பெற்றுக்கொள்வார்.

    அங்கு வரும் வாடிக்கையாளர்கள் பணம் படைத்தவர்களாக இருந்தால் அவர்களை மிரட்டி கூடுதல் பணம் பறித்துள்ளார். மேலும் அவர்கள் அணிந்திருக்கும் நகைகளையும் மிரட்டி எடுத்து கொள்வார்கள்.

    இந்த விபசார கும்பலைச் சேர்ந்த ராஜன், விஷ்ணு, சாஜூ, நிஷாந்த், தீபன், சுதீர், அபிலாஸ் ஆகிய 7 பேரும் கைது செய்யப்பட்டனர். இந்த விபசார கும்பலின் முக்கிய குற்றவாளியாக சுதீஷ் என்பவர் இருந்து உள்ளார்.

    அவர் போலீசார் வருவதை அறிந்ததும் தப்பி ஓடி தலைமறைவாகி விட்டார். அவரை கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்து உள்ளனர்.

    இந்த விபசார கும்பலிடம் இருந்து ஒரு கார், மோட்டார் சைக்கிள், 7 செல்போன்கள், ரூ.30 ஆயிரம் ரொக்கப்பணம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். அந்த செல்போன்களை போலீசார் சோதனை செய்தபோது ஏராளமான வாடிக்கையாளர்களின் போன் நம்பர்கள் அதில் பதிவு செய்யப்பட்டிருந்தது தெரிய வந்தது. அதில் பலர் முக்கிய பிரமுகர்கள் ஆவார்கள். அவர்கள் பற்றியும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.




    Next Story
    ×