என் மலர்

  செய்திகள்

  வேட்பு மனு தாக்கல் செய்ய வந்த கெஜ்ரிவால்
  X
  வேட்பு மனு தாக்கல் செய்ய வந்த கெஜ்ரிவால்

  அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கான பயணம் ஆரம்பம் -கெஜ்ரிவால்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  புதுடெல்லி சட்டசபைத் தொகுதியில் போட்டியிடும் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கான பயணம் இன்று தொடங்கியிருப்பதாக தெரிவித்தார்.
  புதுடெல்லி:

  டெல்லியில் பிப்ரவரி 8ம் தேதி சட்டப்பேரவைக்கான தேர்தல் நடைபெறவுள்ளது. இத்தேர்தலில் ஆளும்கட்சியான ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்று, மீண்டும் ஆட்சியைப் பிடிக்க வியூகம் வகுத்துள்ளது. இதற்காக தீவிர களப்பணியாற்றி வரும் அக்கட்சி, மக்களை வரும் வகையில் தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது.

  கட்சியின் தலைவரும் முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில்,  24 மணி நேர மின்சார வினியோகம், 200 யூனிட்டுகள் வரை மின் கட்டணம் ரத்து,  24 மணிநேர தூய்மையான குடிநீர் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. 

  இந்நிலையில் புதுடெல்லி தொகுதியில் போட்டியிடும் அரவிந்த் கெஜ்ரிவால், ஜாம்நகர் ஹவுசில் உள்ள தேர்தல் அலுவலகத்தில் இன்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். 

  கெஜ்ரிவால் நேற்றே வேட்பு மனுவை தாக்கல் செய்ய திட்டமிட்டு, தனது ஆதரவாளர்களுடன் பேரணியாக சென்றார்.  ஆனால் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்ற பேரணி, தேர்தல் அலுவலகத்தை அடைவதற்கு தாமதம் ஆகிவிட்டது. இதனால், இன்று மனு தாக்கல் செய்தார். 

  முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த கெஜ்ரிவால், அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கான பயணத்தை தொடங்கியிருப்பதாகவும், ஊழலை அகற்றி டெல்லியை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்வதே தனது குறிக்கோள் என்றும் கூறினார்.

  ‘பாஜக, காங்கிரஸ் மற்றும் பல்வேறு கட்சிகள் ஒன்றாக வந்துள்ளன. இந்த கட்சிகள் அனைத்துக்கும் ஒரே குறிக்கோள், கெஜ்ரிவாலை தோற்கடிக்க வேண்டும் என்பதுதான். ஊழலை எவ்வாறு அகற்றுவது, டெல்லியை எப்படி முன்னேற்றப்பாதைக்கு கொண்டு வருவது என்பதுதான் எனது ஒரே குறிக்கோள். 

  கெஜ்ரிவாலை தோற்கடியுங்கள் என்கிறார்கள் அவர்கள். சிறந்த பள்ளிகள், சிறந்த மருத்துவமனைகள், மின்சாரம் என நான் சொல்கிறேன். ஒன்றுசேர்ந்து என்னை வீழ்த்துவதுதான் அவர்களின் ஒரே குறிக்கோள்’ என்றார் கெஜ்ரிவால்.
  Next Story
  ×