search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தஜ்முல்ஹக்
    X
    தஜ்முல்ஹக்

    கேரள லாட்டரியில் ரூ.1 கோடி பரிசு கிடைத்ததும் போலீஸ் உதவியை நாடிய தொழிலாளி

    தொழிலாளி வாங்கிய கேரள லாட்டரியில் ரூ.1 கோடி பரிசு கிடைத்ததும் அதை யாரும் பறித்து விடக்கூடாது என்பதற்காக அருகில் உள்ள போலீஸ் நிலையத்துக்கு சென்று உதவியை நாடினார்.

    திருவனந்தபுரம்:

    மேற்கு வங்காளத்தைச் சேர்ந்தவர் தஜ்முல்ஹக் (வயது 34). இவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு கேரள மாநிலம் கோழிக்கோடு வந்தார். கட்டிடத்தொழில் செய்த அவர் அங்கேயே தங்கி விட்டார். அவருக்கு மனைவியும், 3 குழந்தைகளும் உள்ளனர்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு கேரள அரசின் காருண்யா பாக்கியஸ்ரீயின் ரூ.1 கோடி லாட்டரிச் சீட்டை வாங்கினார். அவர் வாங்கிய லாட்டரிச் சீட்டுக்கு முதல் பரிசான ரூ.1 கோடி கிடைத்தது.

    இதையறிந்த தஜ்முல்ஹக், பெருமகிழ்ச்சி அடைந்தார். தனது லாட்டரிச்சீட்டை யாரும் பறித்து விடக்கூடாது என அச்சம் அடைந்த அவர் பக்கத்தில் உள்ள போலீஸ் நிலையத்துக்கு லாட்டரிச் சீட்டுடன் ஓடினார்.

    தான் வாங்கிய லாட்டரிச்சீட்டுக்கு ரூ.1 கோடி பரிசு கிடைத்துள்ளது. போலீசார் பாதுகாப்பு அளித்து அந்த பணத்தை எனக்கே கிடைக்கும்படி வாங்கித்தர வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

    பணியில் இருந்த போலீசாரும் லாட்டரிச்சீட்டை வாங்கி பார்த்து அந்த சீட்டுக்கு ரூ.1 கோடிகிடைத்து இருப்பதை உறுதி செய்தனர். இதையடுத்து போலீசார் அவரை அங்குள்ள வங்கிக்கு அழைத்துச் சென்றனர். லாட்டரிச்சீட்டில் கிடைத்த பணத்தை வங்கியில் டெபாசிட் செய்யவும் ஏற்பாடு செய்து கொடுத்தனர்.

    இதற்காக தஜ்முல்ஹக், போலீசாருக்கு நன்றி தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில் இதுவரை நானும், எனது குடும்பமும் மிகவும் கஷ்டப்பட்டோம். இனி லாட்டரிச்சீட்டில் கிடைத்த பணத்தை கொண்டு மகிழ்ச்சியாக வாழ்வோம் என்றார்.

    Next Story
    ×