search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஷீரடியில் கடையடைப்பு
    X
    ஷீரடியில் கடையடைப்பு

    சாய்பாபா பிறந்த இடம் குறித்த முதல்மந்திரி சர்ச்சை கருத்து - ஷீரடியில் இன்று கடையடைப்பு

    சாய்பாபா பிறந்த இடம் குறித்த முதல் மந்திரி உத்தவ் தாக்கரே கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஷீரடியில் இன்று கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.
    மும்பை:

    மகாராஷ்டிரா மாநிலம் ஷீரடியில் சாய்பாபா கோவில் அமைந்துள்ளது. பிரசித்தி பெற்ற இந்த கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

    சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய முதல் மந்திரி உத்தவ் தாக்கரே, சாய்பாபா பிறந்தது பர்பானி நகரில் உள்ள பத்ரி என்ற இடம் ஆகும். ஷீரடி அல்ல. அதனால் பத்ரி நகர வளர்ச்சிக்காக 100 கோடி ருபாய் வழங்கப்படும் என தெரிவித்தார்.

    முதல் மந்திரியின் இந்த அறிவிப்பு ஷீரடி பகுதி மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, ஷீரடியில் பந்த் நடைபெறும் என அப்பகுதியினர் அறிவித்திருந்தனர்.

    இந்நிலையில், முதல் மந்திரி உத்தவ் தாக்கரேவின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஷீரடியில் இன்று கடையடைப்பு போராட்டம் காலை முதல் நடைபெற்று வருகிறது.

    கடையடைப்பு போராட்டம் நடைபெற்றாலும் ஷீரடியில் சாய்பாபா கோவில் திறக்கப்பட்டு பக்தர்கள் வழக்கம்போல் தரிசனம் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×